TN Weather Update: இனி தமிழ்நாட்டில் மழை இல்லை.. வறண்ட வானிலையே இருக்கும்.. லேட்டெஸ்ட் வானிலை ரிப்போர்ட் இதோ..
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
05.02.2023: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
06.09.2023 முதல் 09.02.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
ஊத்து (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 3, காக்காச்சி (திருநெல்வேலி), மாஞ்சோலை (திருநெல்வேலி), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்) தலா 2, தலைஞாயிறு (நாகப்பட்டினம்), நன்னிலம் (திருவாரூர்), பாம்பன் (இராமநாதபுரம்), பாபநாசம் (திருநெல்வேலி), வேதநத்தம் (தூத்துக்குடி), தங்கச்சிமடம் (இராமநாதபுரம்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), கன்னடியன் அணைக்கட்டு (திருநெல்வேலி), கடனா அணைப் பகுதி (திருநெல்வேலி), சேர்வலர் அணை (திருநெல்வேலி), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), திருநெல்வேலி AWS (திருநெல்வேலி) தலா 1 செ. மீ மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.