மேலும் அறிய
கனமழை எச்சரிக்கை! 6 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை: வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
தமிழ்நாட்டில் வரும் 21ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை
Source : PTI
தமிழ்நாட்டில் 21ஆம் தேதி 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தூத்துக்குடி, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் 23ஆம் தேதி திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ளது என்றும், இது 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion





















