மதுரை, கோவையில் வெளுத்து வாங்கிய கனமழை.. வெளியே போகும்போது பாத்து போங்க மக்களே!
மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
மதுரை, கோவையில் வெளுத்து வாங்கிய கனமழை:
மதுரையில் ரயில் நிலையம், ஆரப்பாளையம், கேகே. நகர், அண்ணாநகர், சிம்மக்கல், மாட்டுத்தாவணி திருப்பரங்குன்றம், ஆனையூர், கோரிப்பாளையம் பழங்காநத்தம், பைபாஸ் சாலை, அவனியாபுரம், வில்லாபுரம் , விமான நிலையம், திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
அதேபோல, கோயம்புத்தூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ராமநாதபுரம், வடவள்ளி, லாலிரோடு, கவுண்டம்பாளையம், உக்கடம், காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாளைக்கு எங்கெல்லாம் மழை இருக்கு?
தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு கழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 14-ஆம் தேதி தெற்ற வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும்.
14.10.2024:
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, நிவைள்ளூர், கான்பெரம். செங்கல்பட்டு, இராணிப்பேட்டை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி,சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மக்களே உஷார்:
அடுத்த 24 மணி நேரத்திற்குவானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இயக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.