TN Weather Forecast: அடுத்த நான்கு நாட்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. முக்கிய அறிவிப்பு..
தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களுக்கு அடுத்த 4 நாட்கள் கனமழை பெய்யக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில பேரிடர் பிரிவு அறிக்கை ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதன்படி நீலகரி,கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் வரும் 8ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவை தவிர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் ஒரு சில இடங்களில் மழை பொழியக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
04.07.2022:அடுத்து ஐந்து நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு. pic.twitter.com/qiR3JyFTdK
— TN SDMA (@tnsdma) July 4, 2022
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும் என்று கருதப்படுகிறது. சென்னையின் ஒரு சில பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கும் இதே நிலையே தொடரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சில பகுதிகள் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் வெப்ப நிலை 27 டிகிரி முதல் 35-36 டிகிரி வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி,கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிகவும் கனமழை பெய்யக்கூடம் என்று எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது. ஆகவே இந்த மாவட்டங்களில் இருக்கும் மக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. அத்துடன் இந்த மாவட்ட நிர்வாகங்களுக்கும் இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மீட்புக் குழு ஆகியவை தயாராக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:நோட்டட் லிஸ்ட்டில் யூ ட்யூபர் டிடிஎஃப் வாசன்.. செக்வைத்த சென்னை போலீஸ்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்