TN Rain Alert: மக்களே உஷார்..! ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் வெளுக்கப்போகும் மழை...
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஜூன் 4,5 ஆகிய 2 தினங்களாக மழை பெய்து வருகிறது
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஜூன் 4,5 ஆகிய 2 தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) June 5, 2022
அதன்படி தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குமரிக்கடல் பகுதியில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக ஜூன் 6, 7 ஆகிய 2 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ஜூன் 6 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில படங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, சேலம், தேனி, நாமக்கல்,கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
இதேபோல் ஜூன் 7 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில படங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, சேலம், தேனி, கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளதால் வெயிலின் கொடுமையால் அவதிப்பட்டு வந்த மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்