மேலும் அறிய

TN New Municipal Corporation: தமிழ்நாட்டில் நான்கு புதிய மாநகராட்சிகள் - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு

Tamil Nadu New Municipal Corporation: தமிழ்நாட்டில் நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதில் புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகியவற்றை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், “ தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகர்ப்புர மக்கள்தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது, மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புரங்களில் வசிக்கும் மக்கள்தொகை சதவீதம் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 53 சதவீதத்திற்கு மேல் விரைவான நகரமயமாக்கல், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளால் உருவாக்கப்பட வேண்டிய அடிப்படை உட்கட்டமைப்புகளையும், குடிமைச் சேவைகளையும் மேலும் சிறப்பாக வழங்குவதற்கான எண்ணற்ற சவால்களை உருவாக்கியுள்ளது. மாநிலத்தின் நகர்ப்புர பகுதிகளில் வாழும் இலட்சக்கணக்கான மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க, இந்த சவால்களை திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என அரசு கருதுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில்..

இதனடிப்படையில், அரசு, பெருநகரங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள நகர்ப்புரத் தன்மை கொண்ட, விரைந்து நகரமயமாகி வரும் பகுதிகளிலும் நகரங்களுக்கு இணையான தரமான சாலைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஆற்றல்மிகு மின்விளக்குகள், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதரும் நோக்கோடு, விரைவாக நகரமயமாகி வரும் பகுதிகளை அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள நகரங்களோடு இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்ட நகராட்சி அல்லது மாநகராட்சிகளாக அமைத்துருவாக்கி வருகிறது. இதன்படி, இவ்வரசு, கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள்  மற்றும் தாம்பரம். காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்பட்ட இந்நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து, மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

TN New Municipal Corporation: தமிழ்நாட்டில் நான்கு புதிய மாநகராட்சிகள் - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு

இந்நிலையில், வரலாற்றுத் தலைநகரமாக விளங்கிய புதுக்கோட்டை கோயில் நகரமான திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரமான காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அந்நகரங்களையும், அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள விரைந்து நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளையும் ஒன்றிணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் 30.03.2023 அன்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பினை செயல்படுத்துவது தொடர்பான உரிய பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், மாநகராட்சிகளை அமைத்துருவாக்குதற்கான 4 புதிய நடைமுறைகளை தொடங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் தற்போது ஆணையிட்டுள்ளார்கள். 

இணைக்கப்பட்ட நகராட்சி ஊராட்சிகள் விபரம்

இதன்படி, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி; திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி: நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி: காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி, என் மொத்தம் 4 புதிய மாநகராட்சிகளை உருவாக்குவது தொடர்பான அரசின் உத்தேச முடிவினை அறிவித்து இன்று (15.3.2024) ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. 1998 ஆம் ஆண்டு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படியான உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு புதிய மாநகராட்சிகள் அமைத்துருவாக்கப்படும்.

TN New Municipal Corporation: தமிழ்நாட்டில் நான்கு புதிய மாநகராட்சிகள் - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு

புதிய மாநகராட்சிகள்

இதன்மூலம், புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேலும் சிறப்பாக ஏற்படுத்தவும் மற்றும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள், பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிகளுக்கு வந்து செல்வோர், சுற்றுலாப் பயணிகள், வணிக நிறுவனங்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கைத்தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் வாய்ப்பாகவும் அமையும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Hero Splendor+ vs Hero HF Deluxe: தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Hero Splendor+ vs Hero HF Deluxe: தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Justin Trudeau Katy Perry: உறவை உலகுக்கு அறிவித்த பிரபல ஜோடி; வலைதள பதிவின் மூலம் வைரலான ஜஸ்டின் ட்ரூடோ-கேட்டி பெர்ரி
உறவை உலகுக்கு அறிவித்த பிரபல ஜோடி; வலைதள பதிவின் மூலம் வைரலான ஜஸ்டின் ட்ரூடோ-கேட்டி பெர்ரி
எச் ராஜாவையெல்லாம் கண்டுக்கவே கூடாது... தமிழக அரசியலில் அவர் ஒரு சாபக்கேடு- விளாசிய சேகர்பாபு
எச் ராஜாவையெல்லாம் கண்டுக்கவே கூடாது... தமிழக அரசியலில் அவர் ஒரு சாபக்கேடு- விளாசிய சேகர்பாபு
Ola S1 Pro: சிங்கிள் சார்ஜில் 320 கிலோமீட்டர் மைலேஜ்.. Ola S1 Pro விலை, தரமும் எப்படி?
Ola S1 Pro: சிங்கிள் சார்ஜில் 320 கிலோமீட்டர் மைலேஜ்.. Ola S1 Pro விலை, தரமும் எப்படி?
Embed widget