Mamallapuram First Place: தாஜ்மஹாலை விஞ்சிய ஆச்சரியம்.. மாமல்லபுரம் குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்..
தாஜ்மஹாலை விட மாமல்லபுரத்திற்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்ததாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது
2021- 22 ஆம் ஆண்டில் தாஜ்மகாலை விட மாமல்லபுரத்திற்கு அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்ததாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2021- 22 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த நினைவுச் சின்னங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகரிப்பு:
அதில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 984 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் சிற்பங்களை காண வருகை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தாஜ் மகாலுக்கு வெறும் 39 ஆயிரத்து 922 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்தை விட 33 சதவீதம் குறைவான பயணிகளே தாஜ் மகாலுக்கு வருகை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது இடத்தில் சாளுவன்குப்பம் புலிக்குடைவரையை பார்வையிட்டுள்ளனர். ஐந்தாவது இடத்தில் செஞ்சி கோட்டை இடம் பெற்றுள்ளது.
இந்தியாவில், அதிக வெளிநாட்டவர்கள் வருகை புரிந்த சுற்றுலா இடங்களில் முதல் 10 இடங்களில் 5 இடங்களை தமிழ்நாடு பெற்றுள்ளது. இது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகரிப்பு:
அதில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 984 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் சிற்பங்களை காண வருகை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தாஜ் மகாலுக்கு வெறும் 39 ஆயிரத்து 922 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்தை விட 33 சதவீதம் குறைவான பயணிகளே தாஜ் மகாலுக்கு வருகை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது இடத்தில் சாளுவன்குப்பம் புலிக்குடைவரையை பார்வையிட்டுள்ளனர். ஐந்தாவது இடத்தில் செஞ்சி கோட்டை இடம் பெற்றுள்ளது.
இந்தியாவில், அதிக வெளிநாட்டவர்கள் வருகை புரிந்த சுற்றுலா இடங்களில் முதல் 10 இடங்களில் 5 இடங்களை தமிழ்நாடு பெற்றுள்ளது. இது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
”கொரோனா தொற்று?”
தாஜ்மஹாலை விட மாமல்லபுரம் நினைவுச்சின்னங்கள் அதிக வெளிநாட்டு பார்வையாளர்களைக் கொண்டிருப்பதற்கான காரணம், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பயண முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் என்றும் கூறப்படுகிறது.
கொரோனா தொற்றால் இந்தியாவுக்கு, குறிப்பாக வட பகுதிகளுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் வருகை பாதித்ததாக கூறப்படுகிறது.
”தமிழக சுற்றுலாத் துறை மகிழ்ச்சியாகவுள்ளது”
இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலாத் துறைச் செயலாளர் திரு. சந்திரமோகன் தெரிவிக்கையில், தமிழ்நாடு சுற்றுலாத் துறை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாடு, இப்போது ஒட்டுமொத்த இந்தியாவின் பாரம்பரியத் தலைநகராக மாறியுள்ளது. மாமல்லபுரம் வெளிநாட்டினரால் அதிகம் பார்வையிடப்பட்ட இடமாக மட்டுமல்லாமல், உள்நாட்டினரும் அதிகம் வருகை புரியும் இடமாகவும் உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ளா மாமல்லபுரத்தை உலகத் தரத்திற்கு இணையாக மாற்ற ஒரு பெரிய திட்டம் மேற்கொள்ளப்படும் என்றும் சுற்றுலாத் துறைச் செயலாளர் தெரிவித்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், 2021-22 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் விரும்பி பார்க்கப்பட்ட தொல்லியல் சின்னங்களில் தாஜ்மகாலை பின்னுக்குத் தள்ளி, மாமல்லபுரம் சிற்பங்கள் முதலிடத்தை பிடித்துள்ளன. இது பல்லவ வம்சத்தினரும், ஒட்டுமொத்த தமிழர்களும் பெருமை கொள்ள வேண்டிய சாதனையாகும் என தெரிவித்தார்.
2. இந்தியா வந்த வெளிநாட்டு பயணிகளில் 45.5% (1,44,984 பேர்) மாமல்லபுரத்தை பார்வையிட்டுள்ளனர். தாஜ்மகாலை பார்த்தவர்கள் 12.21% (38,922) மட்டுமே. தாஜ்மகாலுக்கு இணையான வெளிநாட்டவர்கள் (25,579 பேர்) சாளுவன்குப்பம் புலிக்குடைவரையை பார்வையிட்டுள்ளனர். pic.twitter.com/hZcMVxlGno
— Dr S RAMADOSS (@drramadoss) September 30, 2022
மேலும் வெளிநாட்டு பயணிகளை, மேலும் ஈர்க்கும் வகையில் மாமல்லபுரத்தில் சுற்றுலா கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். தமிழகத்தின் தொல்லியல் சிறப்பிடங்களை இணைக்கும் வகையிலான தொல்லியல் சுற்றுலா திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.