தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் நியமனம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த தாமரைக்கண்ணன் இன்று ஓய்வு பெறுவதை அடுத்து சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சங்கர் நியமனம்
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளின் அதிரடி இடமாற்றங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தமிழக காவல்துறையில் முக்கிய பொறுப்பான பதவியான சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த தாமரைக்கண்ணன் இன்று ஓய்வு பெறுவதை அடுத்த சங்கரை தமிழ்நாடு அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.
View this post on Instagram
ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேர் மாற்றம்
காவல் தலைமையக ஏடிஜிபியாக செயல்பட்டு வந்த வெங்கட்ராமன், கூடுதலாக நிர்வாகப் பிரிவையும் சேர்த்து கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊர்க்காவல் படை, கமாண்டோ படை ஏடிஜிபியான ஜெயராம், ஆயுதப்படை ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையின் பயிற்சி பள்ளி மற்றும் அகாடமிகளை டிஜிபி சைலேந்திர பாபு கூடுதல் பொறுப்பாக கவனித்துக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமாண்டோ படை ஏடிஜிபியாக இருந்த ஜெயராம், ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை சட்டம் -ஒழுங்கு துணை ஆணையராக இருந்த மதிவாணன், போக்குவரத்து பிரிவுக்கு மாற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளது. கோவை போக்குவரத்து பிரிவில் இருந்த அசோக் குமார், சென்னை சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை கடலோர காவல்படை எஸ்பியாக இருந்த செல்வகுமார், தமிழ்நாடு கமாண்டோ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்பியாக இருந்த ராமர், நாகை கடலோர காவல்படை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.