மேலும் அறிய

Organ Donation: உடல் உறுப்பு தானத்தில் சாதனை படைத்த தமிழ்நாடு: ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் தியாகச் சுவர்!

உடல் உறுப்பு தானம் செய்த கொடையாளர்களின் பெயர்கள் பொறித்த தியாகச் சுவரை, சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், சேகர்பாபு திறந்து வைத்து மரியாதை செய்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தம் துணைவியாருடன் 2009இல் தங்கள் உடல்களை தானம் செய்வதற்குரிய கொடைப் பத்திரத்தில் கையெழுத்திட்டுத் தந்த நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை 23,189 பேர் தங்கள் உடல் தானத்திற்குப் பதிவு செய்துள்ளனர். 2008ஆம் ஆண்டு முதல் இதுவரை மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை 253 பேர் தானமாக வழங்கியுள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

உடல் உறுப்புத் தானத்தில் உலகிலேயே தமிழ்நாடுதான் முதலிடம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அவரது துணைவியார் துர்க்கா ஸ்டாலினும், 2009 ஆம் ஆண்டு ஆகஸ்டு 28 ஆம் நாள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு விழாவுக்காகச் சென்றிருந்தார்கள். அந்த விழா நிகழ்ச்சியின் இடையே இருவரும் தங்களுடைய வாழ்நாள் இறுதியில் உடல் தானம் வழங்குவதற்கான உறுதிமொழிப் படிவத்தில் கையெழுத்திட்டார்கள். அந்த மகத்தான நிகழ்வு அப்போது மிகப்பெரிய பாராட்டுகளையும் வரவேற்புகளையும் அவர்கள் இருவருக்கும் பெற்றுத் தந்தது.

அன்றைய நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "உடல் உறுப்புகளைத் தானம் செய்வது இன்று நேற்றல்ல கடந்த கால வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளது. மன்னர்கள், நாயன்மார்கள் உறுப்புகளைத் தானம் செய்துள்ளனர். கண்ணப்ப நாயனார் தனது இரண்டு கண்களையும் தானமாக வழங்கியதாகப் புராணம் கூறுகிறது. இன்றைய அறிவியல் வளர்ச்சி காரணமாக ஒருவர் உடலில் உள்ள உறுப்புகளை எடுத்து வேறு ஒருவருக்குப் பொருத்தி உயிர் வாழ வைக்கும் சம்பவங்கள் பெருகி வருகின்றன" என்று குறிப்பிட்டார்.

"2008 செப்டம்பர் மாதம் திருக்கழுக்குன்றத்தைச் ஹிதேந்திரனுக்கு சாலை விபத்தில் மூளைச் சாவு ஏற்பட்டது. அவரது இதயம் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெங்களூருவில் உள்ள ஒரு சிறுமிக்கு பொருத்தப்பட்டது. சென்னை மருத்துவர்களின் இந்த சாதனையை மறக்க முடியாது. அவரது பெற்றோரின் நற்செயலை நான் நேரில் அவர்களது வீட்டுக்குச் சென்று பாராட்டினேன். அவரது பெற்றோருக்குச் சுதந்திர தினவிழாவில் விருது வழங்கி அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் சிறப்பித்தார்கள் என்று குறிப்பிட்டார்கள்.

உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடலுறுப்பு தானம் செய்பவர்களைப் பாராட்டும் வகையில், கடந்த 2023 செப்டம்பர் திங்கள் 23 ஆம் தேதி உடலுறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று அறிவித்தார். அந்த வகையில் உடலுறுப்பு தானம் செய்தவர்களின் திருவுடலுக்கு மாவட்ட ஆட்சி நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் போன்ற மாவட்ட அளவிலான அலுவலர்கள் அரசு மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

இந்தத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தபிறகு இதுவரை 253 பேர் உடலுறுப்பு தானம் செய்து, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டிருக்கிறது. இப்படி இரண்டு ஆண்டுகளில் மட்டும் இவ்வளவு பேர் உடலுறுப்பு தானம் செய்திருப்பது என்பது இந்திய அளவில் தமிழ்நாடுதான் இன்றைக்கு முதலிடத்தில் இருக்கின்றது. முத்தமிழறிஞர் கலைஞர் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்ததற்குப் பிறகு இந்திய அளவில் தமிழ்நாடு இத்திட்டத்திற்காக ஒன்றிய அரசின் பல விருதுகளை ஆண்டு தோறும் பெற்று வருகிறது.

தியாகச் சுவர்

அந்த வகையில் கடந்த ஆண்டும் கூட அதிக அளவில் உடலுறுப்பு தானம் செய்தவர்கள் என்கின்ற வகையில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்தது. இந்த திட்டம் அறிவித்தபிறகு இதுவரை உடலுறுப்பு தானம் பதிவு செய்திருப்பவர்கள் 23,189 பேர். இப்படி இந்திய அளவில் மட்டுமல்ல உலகளவில் இந்த சிறப்புக்குரிய திட்டத்திற்கு மேலும் நிறைவேற்றுகின்ற வகையில் தியாகச் சுவர் (wall of honour) நிறுவப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதிலும் இதுபோல் நிறுவப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Heavy Rain: இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.?
இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.? வானிலை மையம் எச்சரிக்கை
Sengottaiyan: அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan joins DMK | தவெகவா? திமுகவா? செங்கோட்டையன் U TURN!மூத்த அமைச்சர் திடீர் சந்திப்பு ஏன்?
Tirunelveli thief Letter |‘’வீட்டுல ஒரு ரூபாய் இல்லைஎதுக்கு யா இத்தனை CCTV.. ’’திருடன் எழுதிய LETTER
DMK MP helps Student |‘’சார் HELP பண்ணுங்க’’ உதவி கேட்ட சிறுவன் வியந்து பார்த்த MP
கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Heavy Rain: இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.?
இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.? வானிலை மையம் எச்சரிக்கை
Sengottaiyan: அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
Dharmapuri Power Cut (27-11-2025): ஒகேனக்கல்லில் நாளை 4 மணி நேரம் கரண்ட் இருக்காது - காரணம் என்ன?
ஒகேனக்கல்லில் நாளை 4 மணி நேரம் கரண்ட் இருக்காது - காரணம் என்ன?
யூ டர்ன் அடித்த செங்கோட்டையன்.! திமுகவா.? தவெகவா.? காலையில் நடந்த பரபரப்பு திருப்பம்
யூ டர்ன் அடித்த செங்கோட்டையன்.! திமுகவா.? தவெகவா.? காலையில் நடந்த பரபரப்பு திருப்பம்
பாதுகாப்பிலும் பட்ஜெட்டிலும் பெஸ்ட்.. Tata Altroz காரின் விலை என்ன? மைலேஜ் என்ன?
பாதுகாப்பிலும் பட்ஜெட்டிலும் பெஸ்ட்.. Tata Altroz காரின் விலை என்ன? மைலேஜ் என்ன?
Supreme Court Condemn: கோயிலுக்குள் செல்ல மறுத்த ராணுவ அதிகாரி; கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம்; நடந்தது என்ன.?
கோயிலுக்குள் செல்ல மறுத்த ராணுவ அதிகாரி; கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம்; நடந்தது என்ன.?
Embed widget