மேலும் அறிய

RSS Rally Postponed: நாளை நடைபெறவிருந்த பேரணியை ஒத்திவைத்தது ஆர்.எஸ்.எஸ்.. ஏன் தெரியுமா..? இதோ முழுவிவரம்!

தமிழ்நாட்டில் நாளை நடைபெறவிருந்த பேரணி ஒத்திவைக்கப்படுவதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நாளை நடைபெறவிருந்த பேரணி ஒத்திவைக்கப்படுவதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அறிவித்துள்ளது. 44 இடங்களில் மட்டும் பேரணி நடத்த நிபந்தனையுடன் உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததால், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டும் என யோசித்துள்ளதாகவும் ஆர்.எஸ்.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ் தென் மண்டல தலைவர் வன்னியராஜன் வெளியிட்ட அறிக்கையில், “ ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம். (ஆர்.எஸ்.எஸ்) சார்பில், கடந்த 97 ஆண்டுகளாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அணிவகுப்பு ஊர்வலங்களை அமைதியான முறையில் நடத்தி வருகிறோம். தமிழகத்திலும் பல ஆண்டுகளாக அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகிறோம். பாரத நாட்டின் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டும், அண்ணல் அம்பேத்கர் பிறந்த 125 ஆண்டை முன்னிட்டும், இந்த ஆண்டு தமிழகத்தில் 50 இடங்களில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த தமிழக அரசின் காவல் துறையிடம் மனு அளித்தோம். அவர்கள் எங்கள் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினோம்.

கடந்த மாதம் நீதிமன்றத்தை அணுகியபோது, நீதிமன்றம் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு காரணத்தினால் அணிவகுப்பை நவம்பர் 6, 2022 நடத்த கூறினார்கள். அதை ஏற்று நாங்கள் நவம்பர் 6ஆம் தேதி அணிவகுப்பை நடத்த இருந்தோம். நேற்று (0411 2022) வந்த தீர்ப்பில் அணிவகுப்பு ஊர்வலத்தை உள் அரங்கிலோ, அல்லது நான்கு சுவர்களுக்குள்ளோ நடத்துமாறு நீதிமன்றம் கூறியிருப்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல. காஷ்மீர், கேரளம், வங்காளம் போன்ற எல்லா இடங்களிலும் அணிவகுப்பு பொது வெளியில் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

நாங்கள் சட்ட ரீதியாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். அதனால், நவம்பர் 6ம் தேதி நடக்க இருந்த ஊர்வலத்தை இத்தகைய காரணங்களால் நடத்த இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

RSS Campaign:  தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் அனுமதி வழக்கில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் இந்த உத்தரவை பிறப்பித்தார். மேலும் அவர் கூறியதாவது, கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், கன்னியாகுமரி, பல்லடம் தவிர மற்ற இடங்களில் பேரணி நடத்த அனுமதி வழங்கலாம் எனவும் உத்தரவிட்டார்.

வழக்கின் பின்னணி

விஜயதசமி, சுதந்திர தினம் ஆகியவற்றை முன்னிட்டு காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பபட்டிருந்தது.  ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து செப்டம்பர் 28-ஆம் தேதிக்குள் அனுமதி நடத்த முடிவு எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. 

சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சுட்டிக் காட்டி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இதனை அடுத்த ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்காததை எதிர்த்து உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 

நவம்பவர் 6-ஆம் தேதி அனுமதி

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 2 ஆம் தேதிக்கு பதில் நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்தால், காவல்துறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அக்டோபர் 2-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்காததை எதிர்த்து உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு எதிராக தொடர்ப்பட்ட வழக்கில் காவல்துறை அனுமதி வழங்காத 47 இடங்களில் அனுமதி வழங்குவது தொடர்பாக நவம்பர் 4-ஆம் தேதி அதாவது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் தெரிவித்திருந்தார். 

மேலும், ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவது தொடர்பாக 47 இடங்களுக்கு உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்து பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. மற்ற எந்த இடங்களில் வழங்கவில்லை என ஆர்எஸ்எஸ் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

நேற்று விசாரணை

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் அனுமதி வழக்கில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், கன்னியாகுமரி, பல்லடம் தவிர மற்ற இடங்களில் பேரணி நடத்த அனுமதி வழங்கலாம் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த 6 இடங்கள் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தலாம். உள்ளரங்கு கூட்டமாக பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் அரங்குகளாக இல்லாமல் விளையாட்டு திடல்களை தேர்ந்தெடுக்கலாம். 6 இடங்களில் மட்டும் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்.எஸ்.எஸ். காத்திருக்க வேண்டும். இந்த 6 இடங்களில் 2 மாதங்களுக்கு பிறகு புதிய மனு கொடுக்கலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்-க்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

நவம்பர் 6-ஆம் தேதி நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறக் கூடாது எனவும் அசம்பாவிதங்கள் நடந்தால் ஆர்.எஸ்.எஸ் தான் பொறுப்பேற்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அறிவுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Embed widget