TN Rains: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம் தெரியுமா?
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் மிக கன மழைக்கும், 16 மாவட்டங்களில் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
weather report: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி:
தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர் மற்றும் திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 31, 2022
16 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு:
இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சாவூர், அரியலூர், கடலூர, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 11 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 31, 2022
தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்றானது மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 31, 2022
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்