News Headlines: புதிய ஆளுநர் பதவியேற்பு, உயிர் காக்கும் மருந்துக்கு ஜி.எஸ்.டி ரத்து..! இன்னும் சில முக்கிய செய்திகள்
News Headlines Today in Tamil: இன்றைய தினத்தின் காலையில் அறிய வேண்டிய முக்கிய செய்திகள் சில...
Tamil News Headlines Today:
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அரசு அலுவலங்களில் சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர் என் ரவி இன்று காலை பதவி ஏற்கிறார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
பிரதமரின் பிறந்த நாளையொட்டி, நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் இரண்டு கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பு மருந்து செலுத்தி படைக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
தஜிகிஸ்தான் தலைநகர் டுஷன்பே-யில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 21-வது உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.
ஃபோர்டு இந்தியா நிறுவனச் சொத்துக்களை வாங்க எம்.ஜி மோட்டார் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்களை ஏலம் விடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
பனை மேம்பாட்டுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ், நடப்பாண்டு 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளும், ஒரு லட்சம் பனைக்கன்றுகளும் முழு மானியத்தில் விநியோகம் செய்யப்படவுள்ளது.
சட்டப்பேரவையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பனை விதைகளை வேளாண் துறைக்கு வழங்கப்படும் என உறுதியளித்தபடி 2021-22 ஆண்டுக்கான ஒரு லட்சம் பனை விதைகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் உடன் இணைந்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் வழங்கியபோது.... pic.twitter.com/7JsEjQKL38
— M Appavu (@AppavuSpeaker) September 17, 2021
கோவிட் பெருந்தொற்று சூழ்நிலையில் தனியார் பள்ளிகள் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டாம் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் நேற்று 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. புற்றுநோய் உள்ளிட்ட ஏழு உயிர்க் காக்கும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி 12% த்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. உயிர்க் காக்கும் மருந்துகளான ஸோல்செல்ஸ்மா, வில்டெப்ஸோ ஆகிய இரண்டு மருந்து பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து முழுவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் யு.பி.எஸ் மற்றும் பேட்டரிகளுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் குப்பத்தில் அமைய உள்ள துறைமுகத்தின் மூலம் 8 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள் என மீன்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.