உங்க வீட்டருகே இருக்கும் டாக்டரை கண்டறிய வேண்டுமா..? இதோ வந்துவிட்டது Search for Doctor App..!
இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மருத்துவர்களை கண்டறியும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மருத்துவர்களை கண்டறியும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மருத்துவர்களை கண்டறிய Search for doctor app என்ற செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. அஞ்சல் குறியீட்டு எண், பகுதியை வைத்து தேடினால் அந்த பகுதியில் உள்ள மருத்துவர்கள் பட்டியல் கிடைக்கும். மருத்துவர்களின் அனுபவம், எந்த துறை வல்லுனர் உள்ளிட்ட தகவல்களும் கிடைப்பெறும். இதன்மூலம் பொதுமக்கள் அவசர காலங்களில் எளிமையாக மருத்துவர்களை கண்டறியமுடியும். இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் இதுபோன்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் 1.60 லட்சம் பதிவு செய்யபட்ட மருத்துவர்கள் உள்ளதாகவும், இந்த செயலில் தற்போது 80 ஆயிரம் மருத்துவர்கள் இணைந்துள்ளதாகவும் தலைவர் செந்தில் தெரிவித்தார். இந்த செயலியை நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தொடங்கி வைத்தார். கொரோனா காலகட்டத்தில் நிறைய போலி மருத்துவர்கள் உருவாகினர் என்றும், இந்த செயலி மூலம் சரியான மருத்துவர்களிடம் மக்கள் சிகிச்சை பெறுவதை உறுதி செய்ய முடியும் என்றார்.
அதேபோல், மருத்துகளை பரிந்துரைக்கும் செயலி மற்றும் மருத்துவ சான்றிதழ் பெறவும் செயலி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலிகளில், தகவல்களை பாதுகாக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக அதுவும் தமிழ்நாட்டில் இதுபோன்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியை நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தொடங்கி வைத்தார். மேலும், நோயாளிகளுக்கு மருத்துவர்கள் ஆலோசனை கூறவும், மருந்துகளை பரிந்துரைக்கும் செயலியை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியும், மருத்துவ சான்றிதழ் பெறும் செயலியை பாராளுமன்ற உறுப்பினர் கனிமாெழி சோமுவும் அறிமுகப்படுத்தினர். மருத்துவர்கள் தங்களின் நோயாளிக்கு அளிக்கப்படும் சான்றிதழ்கள் குறித்த விவரங்களை மற்றவர்கள் பார்க்க முடியாத வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
செயலியை தொடங்கி வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”இனி வரும் காலங்களில் இந்த செயலி மருத்துவத்துறையில் சீரமைப்பை ஏற்படுத்தப்போகிறது. Search for doctor app மூலம் பக்கத்து தெருவில் உள்ள சிறந்த மருத்துவர் யார் என்பதை கண்டறியலாம், நோய்க்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவரை அவசரக் காலத்திலும் தொடர்பு கொள்ள முடியும்” என்றார்.
மேலும், ”கொரோனா காலத்தில் அதிகளவில் போலி மருத்துவர்கள் உருவெடுத்தனர். 2020 முதல் கொரோனா காலத்தில் உருவான போலி மருத்துவர்களை ஒதுக்கி விடலாம். தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை கண்டறிந்து சிகிச்சை பெற முடியும்.
மருத்துவம் சார்ந்த விவரங்களை பதிவு செய்யும் முறையின் மூலம் தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிமுறைகளை பின்பற்றியும், ஆன்லைன் மூலம் மருத்துவச் சிகிச்சை அளிக்க முடியும். மருத்துவர்கள் அளிக்கும் மருத்துவ விடுப்பு சான்றிதழ்களும் பாதுகாப்பாக அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. போலியாக மருத்துவ சான்றிதழ்கள் வழங்க முடியாது. டிஜிட்டல் இந்தியா என கூறும் நேரத்தில் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் டிஜிட்டல் மையமாக உருவாக்கி உள்ளனர்” என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்