மேலும் அறிய

Minister Ragupathy: கொத்தடிமை எடப்பாடி பழனிசாமி ஆளுநரை விமர்சிக்கமாட்டார் - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

கொத்தடிமைகளாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆளுநரை விமர்சிக்கமாட்டார்கள் என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். 

தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதை புள்ளி விவரங்களோடு சுட்டிக்காட்டியும் அதை ஏற்கும் மனப்பக்குவம் ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் நடவடிக்கை பற்றி பழனிசாமி விமர்சிக்காதது ஏன்..? கொத்தடிமைகளாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆளுநரை விமர்சிக்கமாட்டார்கள் என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். 

அமைச்சர் ரகுபதியின் முழு பேட்டி:

ஆளுநர் உரையுடன் இன்று சட்டப்பேரவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனநாயகத்தின் விதிமுறைகளின்படி ஆளுநர் ஆர்.என்.ரவியை அழைத்தார்கள். கேரள ஆளுநர் இரண்டு வார்த்தைகளை மட்டுமே பேசிவிட்டு, சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினார். அதேபோல், நம்முடைய தமிழ்நாடு ஆளுநரும் அரசு தயாரித்து கொடுத்த உரையில் இருந்து ஒரு வார்த்தையை கூட வாசிக்கவில்லை. 

தமிழ்நாடு ஆளுநர் ரவி உரையை வாசிக்காமல், அவரது சொந்த கருத்துகளை மட்டுமே பேசிவிட்டு சென்றுள்ளார். அரசின் உரையில் ஏதாவது சந்தேகம் இருந்திருந்தால் கேட்டு தெரிந்துகொண்டு இருந்திருக்கலாம். அதை விட்டுவிட்டு உண்மைக்கு மாறாக இருக்கிறது, பொய்யாக இருக்கிறது என்று கூறுகிறார். இதற்கும் நாங்கள் விளக்கம் கொடுக்க தயாராக இருக்கிறோம். தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதை புள்ளி விவரங்களோடு சுட்டிக்காட்டியும் அதை ஏற்கும் மனப்பக்குவமும், தாங்கிக்கொள்ளும் சக்தியும் ஆளுநருக்கு இல்லை. 

இந்தியாவில் தமிழ்நாடு அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உதாரணத்திற்கு விளையாட்டு போட்டிகளில் கூட 5வது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு வந்து இருக்கிறோம். அதேபோல், பல துறைகளில் முதலிடத்தில் வந்து இருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல், படிக்க மனம் இல்லாமல் இந்த அரசின் சாதனைகளை தான் வாசிக்க விருப்பமில்லை என தெரிவித்து பொய்யான கருத்துகளை கூறி வெளிநடப்பு செய்துள்ளார். ஆளுநர் மரபுகளை மீறியபோதும் ஜனநாயகப்படி செயல்பட வேண்டும் என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார். 

ஆனால், தமிழகம் அனைத்து இடங்களிலும் முதலிடத்தில் உள்ளது என்பதை புள்ளிவிவரங்களுடன் சொல்ல தயாராக இருக்கிறோம். ஆளுநர் உரையில் உள்ள அம்சங்கள் குறித்து ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டிருந்தால் தந்திருப்போம். தென் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் மக்கள் நலனுக்கு எதிராக உள்ளது. 

நாங்கள் ஆளுநரிடம் சுமூகமாக நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். ஆளுநர்கள் ரிமோட்கள் மூலமே இயக்கப்படுகிறார்கள், அதனால்தான் இவரால் சுயேட்சையாக இயங்க முடியவில்லை.

எடப்பாடி பழனிசாமி ஆளுநரை பற்றி ஏதாவது விமர்சித்து உள்ளாரா..? இன்று சட்டப்பேரவை ஆளுநர் நடந்துகொண்டது குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தாரா..? ஏனென்றால் அவரால் முடியாது. கொத்தடிமைகள், இவர்கள் ஏதாவது சொன்னால் அடுத்த நாள் அவர்கள் வீட்டில் ரெய்டு வந்துவிடும். அதனால்தான் பயந்துகொண்டு பேட்டி கொடுத்து கொண்டு வருகிறார்கள். திராவிட முன்னேற்ற கழகம் பயந்துகொண்டு பேட்டி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அடிமைகள் பயந்துகொண்டுதான் கொடுக்க முடியும்” என தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Jasprit Bumrah:  பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
Jasprit Bumrah: பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
"ஒரு ராத்திரி மட்டும்! பிரபலங்கள் விரும்பும் புது வாழ்க்கை’’ ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் பகீர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Jasprit Bumrah:  பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
Jasprit Bumrah: பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
"ஒரு ராத்திரி மட்டும்! பிரபலங்கள் விரும்பும் புது வாழ்க்கை’’ ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் பகீர்
Teacher Death: ''சாப்பாடு கொண்டு வர்றாருன்னு நினைச்சோம்; சாகடிக்க வந்திருக்கார்''- ஆசிரியை ரமணி கொலை- நேரில் பார்த்தவர் பகீர்!
Teacher Death: ''சாப்பாடு கொண்டு வர்றாருன்னு நினைச்சோம்; சாகடிக்க வந்திருக்கார்''- ஆசிரியை ரமணி கொலை- நேரில் பார்த்தவர் பகீர்!
அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கம் - என்னாச்சு?
அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கம் - என்னாச்சு?
Breaking News LIVE 21 Nov 2024: டங்ஸ்டன் சுரங்கத்திற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படும் - வனத்துறை அமைச்சர் பொன்முடி
Breaking News LIVE 21 Nov 2024: டங்ஸ்டன் சுரங்கத்திற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படும் - வனத்துறை அமைச்சர் பொன்முடி
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே மறந்துடாதீங்க.. உங்களுக்குத்தான் இந்த அறிவிப்பு!
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே மறந்துடாதீங்க.. உங்களுக்குத்தான் இந்த அறிவிப்பு!
Embed widget