TN Headlines Today: குறுவை சாகுபடி பாதிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை - முக்கியச் செய்திகள்
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
குறுவை சாகுபடி பாதிப்பு - முதலமைச்சர் ஆலோசனை
தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், குறுவை சாகுபடி பாதிப்புக்காக வழங்க வேண்டிய நிவாரணத் தொகை குறித்தும் முக்கிய முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் வேளாண்துறை ஆணையர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் நேரில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விரைந்து சேதம் தொடர்பாக உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கான இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் வாசிக்க..
சேலம் அரசு பொருட்காட்சி
சேலத்தில் அரசு பொருட்காட்சியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். அரசு பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அரசு துறைகளின் அரங்குகளை செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார். 45 நாட்கள் நடைபெறவுள்ள இந்த அரசு பொருட்காட்சியில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை, நகராட்சி நிர்வாகத்துறை, அறநிலையத்துறை, பள்ளிக்கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர், வனத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உட்பட 27 அரசுத்துறை அரங்குகளும், சேலம் மாநகராட்சி, ஆவின் பால் நிறுவனம் உட்பட 6 அரசு சார்பு நிறுவனங்களின் அரங்குகள் என 33 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. சேலம் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த அண்ணா பூங்கா அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் முழு உருவ சிலை போன்று அரங்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த அரங்குகளில் அரசின் நலத்திட்ட உதவிகள் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் வாசிக்க..
தமிழர் படைப்பை தூக்கி பிடிக்கும் மோடி!
ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ள பாரத் மண்படபத்தின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள நடராஜர் சிலை, 8 உலோகங்களின் கலவையில் 7 மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும், ஜி20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெற உள்ளது. டெல்லியில் பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் தான் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அந்த மண்டபத்தின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட, 18 டன் எடையிலான பிரமாண்ட நடராஜர் சிலை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.மேலும் வாசிக்க..
பல்லடம் படுகொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் குறைத்தோட்டம் என்ற பகுதியில் வசித்து வந்தவர் செந்தில்குமார். விவசாயியான இவர் தவிடு, புண்ணாக்கு விற்பனை செய்யும் தொழில் புரிந்து வந்தார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் செந்தில்குமார், இடம் சில மாதங்களுக்கு முன்பு ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது செந்தில் குமாரின் உறவினரான மோகன்ராஜ் என்பவருக்கும் வெங்கடேசுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெங்கடேசன் மனோஜ்குமாரிடம் வட்டிக்கு பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்கடேசன் சரியாக வேலைக்கு வராததால் செந்தில்குமார் வெங்கடேசனை வேலையை விட்டு நிறுத்தி உள்ளார்.மேலும் வாசிக்க..
உதயநிதியின் சனாதன பேச்சு
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதியின் பேச்சை திரித்து கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாக பாஜக தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் அமித் மாளவியா மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சை வேண்டுமென்றே திரித்து, தொடர்ந்து இருபிரிவினருக்கு இடையே வன்முறையினை தூண்டும் வகையிலும், மாறுபட்ட கொள்கை கோட்பாடுகளை கொண்ட பல்வேறு பிரிவினருக்கு இடையில் வெறுப்பை தூண்டும் வகையிலும், செயல்பட்டு வரும் திரு. அமித் மாளவியாவும், அவர் தலைமையில் உள்ள பா.ஜ.க. அகில இந்திய தொழில் நுட்ப அணியினரும் இந்த பொய் செய்தியினை தொடாந்து பரப்பி வருகின்றனர்.மேலும் வாசிக்க.
ஆளுநர் ரவி அமைத்த தேடுதல் குழு
ஆளுநர் அமைத்த தேடுதல் குழு தொடர்பான அறிக்கையை சட்டப்படி எதிர்கொள்வோம் என, அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகம் உள்பட 3 பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிக்கு தேடுதல் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, முதன்முறையாக பல்கலைக்கழக மானிய குழு சார்பில், தேடுதல் குழுவில் உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க..