TN Headlines Today: பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு...500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடல்.... 3 மணி செய்திகள் இதோ..!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
- TN Schools Reopening: மாணவர்களே... பள்ளிகள் திறப்பு ஜூன் 12-க்கு மீண்டும் தள்ளிவைப்பு; விவரம்
வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு மீண்டும் ஜூன் 12ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12 அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 1 முதல் ஐந்தாம் வகுப்புக்கு ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. முன்னதாக பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை நடத்திய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/education/tn-schools-reopening-postponed-again-to-june-12-know-in-detail-121378
- Tasmac :500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடல் ... அறிவிப்பு எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய தகவல்..
தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும் என்றும் ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 5,329 மதுக்கடைகளில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். இந்நிலையில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும் என்றும் ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-to-close-500-tasmac-liquor-shops-soon-minister-senthil-balaji-121408
- TN Teacher Vacancy: லட்சங்களில் வேலையில்லா பட்டதாரிகள்; பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் காலி இடங்கள் ஏன்?- ஈபிஎஸ் கண்டனம்
தமிழகத்தில் லட்சக்கணக்கான வேலையில்லா பட்டதாரிகள் இருக்கும் நிலையில், பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை திமுக அரசு காலியாக வைத்திருப்பதாக ஈபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/education/tamil-nadu-teacher-vacancy-aiadmk-edappadi-palanisamy-condemns-tn-govt-on-teachers-vacancy-121421
- 'கர்நாடக தேர்தல் வெற்றியை வைத்து ராகுல்காந்தி பாஜகவை வீழ்த்தலாம் என கனவு கண்டால் பலிக்காது’ - வானதி சீனிவாசன்
பாஜகவை வீழ்த்துவோம் என ராகுல் காந்தி 9 ஆண்டுகளாக சொல்லி வருகிறார். அதன்படி எந்தளவு பாஜக வீழ்த்தப்பட்டுள்ளது? கர்நாடக தேர்தல் வெற்றி வைத்து பாஜகவை வீழ்த்தாலும் என கனவு கண்டால் பலிக்காது என்று வானதி சீனிவாசன் தெரிவித்தள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/coimbatore/rahul-gandhi-dreamd-defeats-bjp-by-winning-karnataka-election-it-will-not-work-says-vanathi-srinivasan-tnn-121386
- Temporary Teachers: அரசுப் பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களா? நிரந்தர நியமனம் எப்போது?- ராமதாஸ் கேள்வி
அரசு பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் அமர்த்தல் கூடாது என்றும் நிலையான ஆசிரியர்களை உடனடியாக அமர்த்த வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர்களுக்கு போட்டித்தேர்வு தேவையில்லை என்பது தான் அனைத்துத் தரப்பினரின் நிலைப்பாடும் ஆகும். அதனடிப்படையில் அவர்களை நிலையான ஆசிரியர்களாக பணியமர்த்தி காலியிடங்களை நிரப்ப 15 நாட்கள் போதுமானது. எனவே, தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிலையான ஆசிரியர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/education/govt-schools-should-not-have-temporary-teachers-appoint-permanent-teachers-ramadoss-statement-121354