TN Headlines Today: ஜூலை 22-ல் தொடங்கும் பொறியியல் கலந்தாய்வு; ஜூலை 20ல் அதிமுக போராட்டம்...முக்கிய நிகழ்வுகளின் ரவுண்டப்!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
ADMK Protest: விலைவாசி உயர்வு.. தமிழ்நாடு முழுவதும் வெடிக்கிறது போராட்டம்.. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து ஜுலை 20ம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதை திமுக அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது. இதை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்தும், ஜுலை 20ம் தேதி தமிழகம் முழுவதும் வருவாய் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் மாபெரும் ஆர்பாட்டம் நடத்தப்படும். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/price-hike-protest-erupts-all-over-tamilnadu-edappadi-palaniswami-announcement-by-admk-128627
RTO Office on Saturday: மக்களே ஒரு செம்ம நியூஸ்.. இனிமே சனிக்கிழமைகூட லைசென்ஸ் வாங்கலாம்.. தமிழ்நாடு அரசு பிறப்பித்த வெயிட்டான உத்தரவு..
சென்னையில் இனி சனிக்கிழமைகள் தோறும் வட்டார போக்குவரத்து அலவலகம் செயல்படும் என தமிழக அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவது 99 ஆர்.டி.ஓ (regional transport office) எனப்படும் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது, இவை அனைத்தும் இந்திய மோட்டர் சட்டத்தின் படி அந்தந்த மாநில அரசுகளுக்கு கீழ் செயல்பட்டு வருகிறது. பொதுவாக அரசு அலுவலகங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை செயல்படும். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/the-tamil-nadu-government-has-issued-an-order-for-the-regional-transport-office-to-function-on-every-saturday-from-now-on-in-chennai-128593
CM Stalin: “பொறுப்புமிக்க பதவி; கனிவாக இருங்கள்; மக்கள்தான் மேல் அதிகாரிகள்” - யூபிஎஸ்சி தேர்ச்சி பெற்றோருக்கு முதல்வர் அறிவுரை
தலைமைச் செயலகத்தில், 2022-ஆம் ஆண்டிற்கான இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் ஆற்றிய உரை. தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல, உங்களது தந்தையின் இடத்தில் இருந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது முகங்களை பார்க்கும் போது, கிராமப்புற முகங்களும் தென்படுகிறது. மேலும் படிக்க https://tamil.abplive.com/education/cm-stalin-speech-to-civil-service-exam-passed-tn-candidates-128586
TN Rain Alert: இன்று 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்? இன்றைய வானிலை நிலவரம்..
13.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/heavy-rain-will-occur-in-8-districts-of-tamil-nadu-today-according-to-the-meteorological-department-128620
Engineering Counselling: ஜூலை 22-ல் தொடங்கும் பொறியியல் கலந்தாய்வு; யார் யாருக்கு எப்போது?- தேதிகள் அறிவிப்பு
பொறியியல் கலந்தாய்வு அட்டவணை இன்று (ஜூலை 13) காலை கிண்டி, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். இதன்படி, பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 22-ம் தேதி தொடங்குகிறது ஜூலை 28ஆம் தேதி முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு நடைபெறும் என்றும் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/education/tamil-nadu-engineering-counselling-2023-dates-announced-know-in-detail-128590