TN Headlines Today: ஜூலை 14-ல் திமுக எம்.பிக்கள் கூட்டம்.. இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...தமிழ்நாட்டின் முக்கிய செய்திகள்..!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
- DMK MP's Meeting: நாடாளுமன்றத்தில் என்ன பேசணும்? - ஜூலை 14ல் முதலமைச்சர் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம்!
நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பது தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் ஜூலை 14 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அதேபோல் மக்களை கவரும் வகையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு சில திட்டங்களை கொண்டு வரும் முனைப்பில் உள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/dmk-mp-meeting-will-be-held-on-july-14th-for-parliament-monsoon-session-127947
- Kalaignar Womens Assistance Scheme: மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்பத்தை எங்கு, எப்படி கொடுப்பது? - நெறிமுறைகளை வெளியிட்ட அரசு
மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப் பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களை கொண்டு உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. தன்னார்வலர்கள் எந்தெந்த நியாய விலை கடைப்பகுதியில் வசிக்கிறார்கள் என்ற விவரம் விரைவில் வழங்கப்படும். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-govt-has-issued-norms-for-kalaignar-womens-assistance-scheme-special-camps-127922
- CM Stalin Letter: இலங்கை கடற்படையால் மன உளைச்சல்.. தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை - மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர் கதையாக அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களை விடுவிக்கக்கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/chief-minister-mk-stalin-letter-to-external-minister-jaishankar-for-release-tamilnadu-fishermen-arrest-by-srilanka-navy-127930
- TN Rain Alert: மாஸ் அறிவிப்பு.. தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
10.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/according-to-the-meteorological-department-heavy-rain-is-likely-to-occur-in-9-districts-of-tamil-nadu-today-127941
- TASMAC: போச்சுடா...! காலை 7 மணிக்கு டாஸ்மாக் கடை திறப்பா? - அமைச்சர் சொன்ன பதிலால் குஷியில் ’குடி’மகன்கள்..!
அண்மையில் மூடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகள் அமைந்திருந்த பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்படும் எனவும், கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிப்பழக்கத்தை கைவிட்டால் மகிழ்ச்சியே எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் ”மதுவிற்பனை செய்து வருமானம் ஈட்ட வேண்டிய நிலை அரசுக்கு இல்லை. டாஸ்மாக் திறக்கப்படும் நேரத்தை மாற்ற ஆலோசித்து வருகிறோம். டாஸ்மாக் கடையை காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை திறக்கவேண்டும் மது பிரியர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/tasmac-liquor-shops-closed-tetra-pack-liquor-tasmac-opening-time-7-am-to-9-am-minister-muthusamy-press-meet-127940