TN Headlines: சட்டப்பேரவையில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றம்; மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகிறார் எல்.முருகன் - முக்கிய செய்திகள்
TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- TN Assembly: ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்பு தனித்தீர்மானம் - சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!
தமிழக சட்டப்பேரவையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த நிலையில் அவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் அதேசமயத்தில் மாநிலங்களில் உள்ள அனைத்து சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தான் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தின் நோக்கமாகும். மேலும் படிக்க
- Lok Sabha Constituency TN: தமிழ்நாட்டின் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகள், எந்தெந்த மக்களவை தொகுதியில் அடங்கும் தெரியுமா?
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கூடிய விரைவில் இதற்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 39 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 1,849,924 வாக்காளர்களுக்கு ஒரு தொகுதி என மொத்தம் 39 மக்களவை தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் படிக்க
- Rajya Sabha: மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகிறார் எல்.முருகன்.. வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக..
மத்திய அமைச்சர் எல். முருகன் எம்.பி பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் போட்டியிடுவார் என பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 15 மாநிலங்களில் உள்ள 56 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து தொகுதிகளுக்கும் வருகின்ற பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும் படிக்க
- Neenga Road Rajava: நீங்க ரோடு ராஜாவா..? தலைநகர் சென்னையை கலக்கும் விளம்பர பலகை: வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தா..?
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய சாலைகளின் நடுவில் உள்ள கம்பங்களில் காவல்துறையினரால் ‘நீங்க ரோடு ராஜாவா..?’ என்ற அச்சிடப்பட்ட குட்டி பேனர் ஒன்று நெடுதூரம் வைக்கப்பட்டுள்ளது. இது காவல்துறையினரால் ஏன் வைக்கப்பட்டது..? எதற்காக வைக்கப்பட்டது..? என்று இப்போது வரை யாருக்கு தெரியவில்லை. ஆனால், ஏதோ ஒரு பாதுகாப்பு தொடர்பான அவர்னஸுக்காகதான் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் படிக்க
- Watch Video: ”அந்த வார்த்தை வேண்டும் ஐயாவுக்கு..” சபாநாயகர் கேள்விக்கு சிரிப்பலையை ஏற்படுத்திய எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்!
தமிழ்நடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், சட்டப்பேரவையின் மூன்றாம் நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசு சார்பில் அரசின் 2 தனித் தீர்மானங்களை முன்மொழிந்தார். மேலும் படிக்க