TN Headlines: நீதியின் பக்கம் நில்லுங்கள் - முதலமைச்சர்; IAS ஆகும் மருத்துவர்.. தமிழ்நாட்டில் இதுவரை இன்று
TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
Lok Sabha Elections: உரிமையாக கேட்கிறேன்; நீதியின் பக்கம் நில்லுங்கள்; வரலாறு காணாத வெற்றி வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்
வரலாறு காணாத வெற்றியை தேடித்தர வேண்டும் எனவும் தமிழ்நாட்டின் பகைவர்களை வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுபவர்களை வீழ்த்துவோம் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உரிமையோடு கேட்கிறேன்! நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள். மேலும் படிக்க..
Naan Mudhalvan Scheme: நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற மருத்துவர் பிரசாந்த்!
யுபிஎஸ்சி எனப்படும் அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் நேற்று (ஏப்ரல் 16) வெளியாகின. இதில் 1016 தேர்வர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்திய அளவில் முதல் இடத்தை ஆதித்யா ஸ்ரீவத்சவா பிடித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து புவனேஷ் ராம் என்னும் தேர்வர் முதலிடம் பிடித்துள்ளார். அவர் அகில இந்திய அளவில் இவர் 41ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். மேலும் படிக்க
Latest TN Poll Trend: தமிழகத்தில் திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட கள நிலவரம்.. எந்தெந்த தொகுதிகளில் வெற்றி யாருக்கு?
தமிழகத்தில் இன்று மாலையுடன் பரப்புரை முடிந்து, நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. 18-வது மக்களவைக்காக, தமிழகத்தில் இருந்து 39 எம்-பி-க்கள் தேர்வு செய்வதற்காக, சுமார் 6 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பதிவு செய்ய இருக்கின்றனர். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 தொகுதிகளுக்கும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும் படிக்க
மேகதாதுவில் அணைக்கட்டி விட்டால் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காது - இபிஎஸ் ஆவேசம்
சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் சேலம் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது, "சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக, திமுக, பாமக ஆகிய மும்முனை போட்டி நடைபெறுகிறது. அதிமுகவிற்கு துரோகம் செய்பவர்கள் அரசியலில் காணாமல் போவார்கள்.மேலும் படிக்க..
உங்களுக்கு வாக்கு இருக்கிறதா? வாக்களிப்பது எப்படி? என்ன ஆவணங்கள் தேவை? A- Z தகவல் இதோ!
வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். அந்த பட்டியலிலேயே வாக்குச் சாவடி மையம், தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள், தேர்தல் தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்களைப் பெற முடியும். வாக்காளர் தன்னுடைய பெயர் இருக்கிறதா என்பது உள்ளிட்ட விவரங்களை அறிவது எப்படி? மேலும் படிக்க..
Mettur Dam: மூன்றாம் நாளாக 68 கன அடியில் நீடித்து வரும் மேட்டூர் அணையின் நீர்வரத்து.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 68 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 68 கன அடியாக இருந்தது. மேலும் படிக்க