மேலும் அறிய

இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராகத் தமிழ்நாடு திகழ்கிறது - தமிழ்நாடு அரசு பெருமிதம்

பல்வேறு சர்வதேச - தேசிய போட்டிகளை தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடத்தி, விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு  சிறந்து விளங்குவதாக தமிழ்நாடு அரசு செய்தி வெளியிட்டுள்ளது. 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான சீர்மிகு ஆட்சியில், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி -2022, சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி -2022, ஸ்குவாஷ் உலக கோப்பை - 2023, ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி.-2023, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி 2023 ஆகிய சர்வதேச - தேசிய போட்டிகளை தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடத்தி, தமிழ்நாடு இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராகத் திகழ்கிறது என தமிழ்நாடு அரசு செய்தி வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பல துறைகள் இந்திய அளவில் முதன்மையாகவும், முன்னணியாகவும் திகழ்கின்றன. அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் சிறப்பான நல்ல பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதன் பயனாக. இன்று விளையாட்டுத் துறையிலும் தமிழ்நாடு இந்தியா மட்டுமின்றி. உலகெங்கிலும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிடும். நாடுகளும் உற்று நோக்குவதோடு, பாராட்டுகளையும் வழங்கிச் சிறப்பித்துள்ளன.

முத்தமிழறிஞர் கலைஞர் இளைஞர்களை ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுத்திடவும். சிதறிக் கிடக்கும் அவர்களின் ஆற்றலை திரட்டிடவும், அவர்களை மன உறுதி படைத்தவர்களாகவும், எதிர்கால வாழ்வை நம்பிக்கையோடு எதிர்கொள்பவர்களாகவும் உருவாக்கும் பெரும்பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டு, "நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே “ எனும் சங்ககால பாடலை நினைவுகூரும் வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையை 28.3.2000 அன்று ஏற்படுத்தினார். 

அந்த வகையில், இத்துறையின் பெயருக்கேற்ப மிகவும் குறைந்த வயதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டலின், அர்ப்பணிப்பு உணர்வுகள், தொய்வில்லாத் தொடர் பணிகள் கரணமாக விளையாட்டுத் துறையில் வியக்கத் தகுந்த முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.  அதன் மூலம் பதக்கங்களை வாரிக் குவித்துத் தமிழ்நாட்டுக்குப் பெருமைகளைத் தேடித் தந்துள்ளார் என்றால் அது மிகையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் இத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் இத்துறைக்கு 1000 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்கள். இதன் பயனாக, சென்னையில் உலகத் தரத்திற்கு இணையான நேரு விளையாட்டரங்கம். நேரு உள் விளையாட்டரங்கம். மேரி இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம், டென்னிஸ் விளையாட்டு அரங்கம், நீச்சல் குளங்கள் ஆகியவற்றில் நவீன வசதிகளும் புரைமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

40 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையிலும் சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தக்கூடிய வகையிலும் சென்னையில் அமையப் பெற்றுள்ள ஜவஹர் நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் 9 ஆயிரம் பாயைாளர்கள் அமரக்கூடிய நேரு உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளோடு புதிய செயற்கை இழை தடகளப் பாதை எல்இடி மின்னொளி வசதிகள் நிறுவுதல் மற்றும் புனரமைப்பு பணிகள் அனைத்தும் ரூபாய் 60 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நவீன விளையாட்டு அரங்கம் மற்றும் மாவட்ட விளையாட்டு அரங்கங்கள் அனைத்திலும் 30 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராகத் தமிழ்நாடு திகழ்கிறது - தமிழ்நாடு அரசு பெருமிதம்

அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கங்கள்

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் வேண்டுமென்கின்ற தொலைநோக்குடன் திட்டமிடப்பட்டு, அதற்கான அறிவிப்பினை  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  சட்டப்பேரவையில் வெளியிட்டார்.

பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் வாயிலாக முதற்கட்டமாக 10 சட்டமன்றத் தொகுதிகளில் தடகளம், கால்பந்து கூடைப்பந்து, கைப்பந்து,  போன்ற முக்கிய விளையாட்டுகளுக்கான மைதானங்கள் கூடிய வசதிகளுடன் கூடிய சிறு விளையாட்டு அரங்கம் தலா 3 கோடி ரூபாய்ச் செலவில் அமைக்கப்பட்டு வருகின்றது

சென்னையில் உலகத் தரத்திலான விளையாட்டு நகரம்

கடந்த 3 ஆண்டுகளில் சென்னையில் சர்வதேச மற்றும் தேசிய அ போட்டிகள் திறம்பட நடத்தப்பட்டு ஒன்றிய அரசின் சார்பிலும், பன்னாட்டு அளவிலும் பாராட்டுகளைப் பெற்றுத் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள இந்த விளையாட்டுத் துறையிலான அடுத்த கட்டத்திற்கு அடுத்துச் செல்கின்ற வகையில் சென்னையில் நகரம் ஒன்றை அமைத்திடத் திட்டமிடப்பட்டுள்ளன.

வெளிநாட்டு பயிற்சியாளர்கள் நியமனம்

தமிழ்நாட்டில் பயிற்சி தரத்தை  உயர்த்தும் வகையில், குறிப்பாக தடகளம், நீச்சல், டென்னிஸ் ஹாக்கி  போன்ற விளையாட்டுகளில் வெளிநாட்டுப் பயிற்சியாளர்களை நியமித்து அவர்கள் மூலம் ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதை இலக்காக கொண்டு 81 புதிய வெளிநாட்டு பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச - தேசிய போட்டிகளை தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடத்தி இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராகத் திகழ்கிறது தமிழ்நாடு என தமிழ்நாடு அரசு செய்தி வெளியிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget