Tamilnadu Roundup: டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி.. தமிழ்நாட்டில் வெளுக்கும் மழை - தமிழகத்தில் இதுவரை!
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

அதிமுக உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார் எடப்பாடி பழனிசாமி
டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்த வாய்ப்பு
ஜெ. மறைவிற்கு பிறகு அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜகதான் - எடப்பாடி பழனிசாமி
இபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளராக உள்ள கூட்டணியில் இடம்பெற மாட்டோம் - தினகரன்
முதல்வர் வேட்பாளர் கருத்தில் மாற்றி, மாற்றி பேசும் தினகரன் - நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை
அந்தியூர் அருகே விவசாயிகள் குடும்பத்துடன் போராட்டம் - விவசாய நிலங்களை பட்டா நிலங்களாக மாற்றியதற்கு எதிர்ப்பு
சென்னையில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த மழை
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் கனமழை பெய்ததன் எதிரொலி; 14 விமானங்களின் சேவைகள் பாதிப்பு
அமெரிக்க வரி விதிப்பிற்கு பிறகு இன்று இந்தியா - அமெரிக்க இன்று பேச்சுவார்த்தை
ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம்; விஜய்க்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுரை
வருமான வரித்தாக்கல் செய்ய இன்று ஒருநாள் நீட்டிப்பு
திமுக அரசின் வாக்குறுதிகள் சிலவற்றை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு பாஜகவே காரணம் - வைகோ குற்றச்சாட்டு
கிராண்ட் சுவிஸ் செஸ் பட்டம் வென்ற வைஷாலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
சேலம் அரசு மருத்துவமனையில் கருவில் இருக்கும் குழந்தை என்ன? என்று கூறிய அரசு மருத்துவர் சஸ்பெண்ட்
மல்லை சத்யா புதிய கட்சி தொடக்கம்; துரை வைகோ எதிர்ப்பாளர்கள் இணைந்தனர்
போத்தீஸ் நிறுவனத்தில் 5வது நாளாக வருமான வரித்துறை சோதனை
மன்னார்குடி அருகே 100 ஆண்டுகளுக்கு பிறகு மயானத்திற்கு பாதை அமைப்பு
குலசை தசரா திருவிழாவில் அம்மன் வேடம் தரிந்து செல்பவர்களுக்காக முடி தயாரிக்கும் பணிகள் தீவிரம்






















