TN govt orders:அரசு பள்ளிகளில் செஸ் போட்டி நடத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் செஸ் போட்டி நடத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது
அரசு பள்ளிகளில் செஸ் போட்டிகள் :
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில், வட்டம், மாவட்டம் மற்றும் மாநில அளவில், செஸ் போட்டிகள் நடத்த தமிழ்நாடு அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. அரசு பள்ளிகளில் மாணவர்களிடையே செஸ் போட்டிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், செஸ் போட்டிகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி:
செஸ் ஒலிம்பியாட், 1927ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு முறை கூட இந்தியாவில் நடத்த வாய்ப்பு கிட்டாத நிலையில், தற்போது 2022ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் வென்றதன் மூலம் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெற இருக்கிறது. முதல் முறையாக சென்னையில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது.
It's Out!
— d'pawn Chess Academy 🇮🇳 (@dpawnchess) April 1, 2022
2023 World Chess Olympiad Schedule is Out
Chennai India
The clash of champions will start from 29 June!🔥#ChessOlympiad #Indianchess #chessolympiad2022 #India #chennai pic.twitter.com/z48dRPLess
ஊக்குவிக்கும் வகையில் போட்டி:
இந்நிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, அடுத்த மாதம் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மாணவர்களை பார்வையிட செய்திடவும், தமிழ்நாட்டு மாணவர்களிடையே செஸ் விளையாட்டை ஊக்குவிக்கவும், செஸ் போட்டிகள் மூலம் மாணவர்களின் நுண்ணறிவுத் திறனை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு ரூ.1 கோடி ஒதுக்கியுள்ளது.
View this post on Instagram
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்