மேலும் அறிய

IAS Transfer: கரூர் மாவட்டத்திற்கு புதிய கலெக்டர்! ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி அதிரடி காட்டும் முதலமைச்சர் விஜய்!

தமிழ்நாட்டின் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.தமிழக அரசு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து வரும் சூழலில், இன்று 10 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்:

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 

1. வேளாண்துறை இயக்குனராக பொறுப்பு வகித்த முருகேஷ் ஐஏஎஸ்  மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

2. மீன்வளத்துறை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு மீன்வளத்துறை  வளர்ச்சி கழகத்தின் மேலாண் இயக்குனராக பொறுப்பு வகித்த முனைவர் கேவி முரளிதரன் ஐஏஎஸ் பணியிடம் மாற்றப்பட்டு வேளாண்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. சென்னை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை இயக்குனர் முத்துக்குமரன் ஐஏஎஸ் கரூர் மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த ரவிக்குமாருக்கு பதிலாக புதியதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. திருவள்ளூர் துணை ஆட்சியர் அப்துல் ரசிக் ஐஏஎஸ்  (பயிற்சி நிறைவு பெற்று) திருவள்ளூர், பொன்னேரி துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 

5. செங்கல்பட்டு துணை ஆட்சியர் நல்லசிவன் ஐஏஎஸ்( பயிற்சி நிறைவு பெற்று) காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. கூடுதல் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் ஐஏஎஸ் மாற்றப்பட்டு அவர் தகவல் தொழில்நுட்ப இணைய சேவை துறையின் கூடுதல் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. தமிழ்நாடு கடல்வழி ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் வெங்கடேஷ் ஐஏஎஸ் பணியிடம் மாற்றப்பட்டு தமிழ்நாடு கைத்தறி நெசவு ஜவுளித்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

8. உயர்கல்வித்துறையின் செயலாளர் பி.சங்கர் ஐஏஎஸ் பணியிடம் மாற்றப்பட்டு, வேளாண்துறை தயாரிப்பு ஆணையராகவும், வேளாண் - விவசாயிகள் நலவாரிய செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

9. தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க மையத்தின் ஆணையராக லதா ஐஏஎஸ் பணியிடம் மாற்றப்பட்டு கூட்டுறவுத்துறை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. வருவாய் பேரிடர் துறையின் ஆணையராக காயத்ரி கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த நாட்களில் பல மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் மாற்றப்படுவார்கள் என்றும், பல துறைகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 

தலைப்பு செய்திகள்

TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
Embed widget