மேலும் அறிய

TN Transport : போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை...ரூ.17.15 கோடி ஒதுக்கியது தமிழக அரசு...!

போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.17.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

TN Transport : போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.17.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு கொரோண பெருந்துயர் காலத்தில் முழு அடைப்பின் போது தன்னுயிரையும் கருதாமல் பணிபுரிந்த தொழிலாளர்களை சிறப்பிக்கும் வகையில், சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.17.15 கோடியும், 14வது ஊதிய ஒப்பந்தத்தின்படி ஊதிய நிலுவைத் தொகையான ரூ.171.05 கோடி வழங்க ஆணைகள் பிறப்பித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ”தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து வரும் 1.14 லட்சம் பணியாளர்களால், தினமும் 20,111 பேருந்துகள் வரை தமிழ்நாடு முழுவதும், அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கும் மக்களின் போக்குவரத்திற்காக இயக்கப்பட்டு 1.70 கோடி பயணிகள் தினமும் பயன் பெறுகின்றனர்.

கொரோனா பெருந்துயர் காலமான 2020, 2021 ஆம் ஆண்டுகளில் மக்களின் உயிர்காக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்ட முழு அடைப்பின்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் அத்தியாவசியான பேருந்து சேவைகளுக்காக, பேருந்துகளை இயக்கின. அப்போது. போக்குவரத்துப் பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பணிபுரிந்தனர். அவ்வாறு பணிபுரிந்த தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின் பேரில் சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.17.15 கோடி வழங்குவதற்கு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா காலத்திற்கு பின், போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் இருந்த போதிலும், தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு. 14 வது ஊதிய ஒப்பந்தத்தை 01-09-2019 முதல் அமல்படுத்தி, ஊதிய உயர்வு அளித்து, அதன்படி தற்போது ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி 2022 முதல் ஜூலை 2022 வரை உள்ள காலத்திற்கான ஊதிய நிலுவைத் தொகையான ரூ.171.05 கோடி வழங்குவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின் பேரில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க

Minister Ponmudi: சொத்துக் குவிப்பு வழக்கு - அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு

Bhim Army Chief Shot: பரபரப்பு..! சினிமா பாணியில், பீம் ஆர்மி தலைவர் மீது துப்பாக்கிச் சூடு.. காரில் விரட்டி வந்து சுட்ட கும்பல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Australian Open 2025: ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
"பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது" ஆளுநர் ரவி பேச்சு
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vivek Ramaswamy DOGE Resign : பதவியேற்ற TRUMP..BYE சொன்ன விவேக்! திடீர் TWISTJagabar Ali Murder : ’’அநியாயம் பண்றாங்க’’அதிமுக நிர்வாகி படுகொலைஇறக்கும் முன் கடைசி வீடியோKomiyam Drinking Fact Check | கோமியம் குடிச்சா நல்லதா?IIT காமகோடி Vs மனோ தங்கராஜ் உண்மை நிலை என்ன?Appavu walk out : ஆளுநர் ரவி சர்ச்சை அப்பாவு வெளிநடப்பு !பீகார் சபாநாயகர்கள் மாநாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Australian Open 2025: ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
"பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது" ஆளுநர் ரவி பேச்சு
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
SSC MTS Result 2024 OUT: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு வெளியானது.! கட் ஆஃப் எவ்வளவு ?
SSC MTS Result 2024 OUT: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு வெளியானது.! கட் ஆஃப் எவ்வளவு ?
துருக்கி ரிசார்ட்டில் தீ விபத்து - 66 பேர் பலி; 51 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
துருக்கி ரிசார்ட்டில் தீ விபத்து - 66 பேர் பலி; 51 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
துப்பாக்கி சுடும் பயிற்சி; எல்லை தாண்டி மீன் பிடிக்காதீங்க - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
துப்பாக்கி சுடும் பயிற்சி; எல்லை தாண்டி மீன் பிடிக்காதீங்க - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
பரந்தூரில் ஏர்போர்ட் - பயப்படாதீங்க: விடாப்பிடியாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு 
பரந்தூரில் ஏர்போர்ட் - பயப்படாதீங்க: விடாப்பிடியாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு 
Embed widget