Tamil Nadu Covid -19 Vaccination : 18 முதல் 44 வயதினருக்கு இன்று முதல் தடுப்பூசி; எப்படி பெறுவது?
நீங்கள் 18-44 வயதுக்கு உட்பட்டவரா? இன்று முதல் உங்களுக்கான தடுப்பூசியைப் பெறுவது எப்படி? என்பது குறித்து படிப்படியான விளக்கம்.
தமிழ்நாட்டில் 18-44 வயதினருக்கான தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்க இருக்கிறது.1 மே முதலே தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் கிடைத்துவந்த நிலையில் தற்போது அரசே தனது இலவசத் தடுப்பூசி திட்டத்தின் கீழ் 18-44 வயதினருக்குமான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை நாளை தொடங்குகிறது.
நீங்கள் 18-44 வயதுக்கு உட்பட்டவரா? உங்களுக்கான தடுப்பூசியை எப்படிச் செலுத்திக் கொள்வது? படிப்படியான விளக்கம் கீழ்வருமாறு:
- தடுப்பூசிக்கான முன்பதிவை கோவின் ஆப் வழியாகச் செய்யவேண்டும்
https://selfregistration.cowin.gov.in/ என்கிற இணையதளத்துக்குச் செல்லவும்.
2.உங்களது பத்து இலக்க மொபைல் எண்ணை பதிவு செய்யவும்.
3. உங்களது மொபைல் போனுக்கு வரும் OTP உள்ளிடவும்.
4.உங்களது மொபைல் கணக்கு பக்கத்தில் (Account detail) தடுப்பூசிக்கான உறுப்பினர்களைச் சேர்க்கவும். அதற்கு Add member என்கிற பட்டனை அழுத்தவும்.
5.தடுப்புசி பதிவுக்கான பக்கத்துக்கு அது அழைத்துச் செல்லும் (Registration for Vaccination)
6.உங்களது அடையாள அட்டை(Photo ID proof) ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யவும்(ஆதார், பான் கார்ட், ஓட்டுநர் லைசன்ஸ், பாஸ்போர்ட், பென்ஷன் அட்டை) இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யவும்.
7.உங்களது அடையாள அட்டையின் எண்ணை (Photo ID number) பதிவிடவும். உங்களது அடையாள அட்டையில் இருப்பது போன்ற பெயரையும் உங்களது பாலினத்தையும் அடுத்தடுத்து குறிப்பிடவும். உங்களது பிறந்த வருடத்தை ‘YYYY’ என்கிற ஃபார்மெட்டில் பதிவு செய்யவும். இறுதியாக ADD என்கிற பட்டனை அழுத்தவும்.
8.உங்களது பெயர் அக்கவுண்ட்டில் இவ்வாறு சேர்க்கப்படும். அது தொடர்பான தகவலும் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
- நினைவிருக்கட்டும், அதில் இருக்கும் ’Secret code, reference ID, ID Number’ உள்ளிட்டவற்றைப் பொதுவெளியில் பகிரக்கூடாது.
10.இது போல நான்கு உறுப்பினர்கள் வரை ஒரு அக்கவுண்ட்டில் சேர்க்கலாம்.
11.பெயரைச் சேர்த்த பிறகு உங்களுக்கான தடுப்பூசி தேதியைப் பதிவு செய்துகொள்ளவும். அதற்கு உங்கள் பெயருக்குக் கீழே வரும் ‘Schedule’ பொத்தானை அழுத்தவும்.
- தடுப்பூசி அப்பாயிண்மெண்ட்டுக்கான பக்கத்துக்கு அது உங்களை அழைத்துச்செல்லும்.
- உங்களது ஊரின் பின்கோட் வாரியாகவோ (Search by PIN) அல்லது மாவட்ட வாரியாகவோ (Search by district) உங்களுக்கான தடுப்பூசி கிடைக்கும் இடத்தைத் தேடலாம்.
- அதில் 18 வயதுக்கு மேல் (Age 18+) மற்றும் இலவசம் (Free) ஆகிய பொத்தான்களை அழுத்தித் தேதி வாரியாக உங்களுக்கான தடுப்பூசி கிடைக்கும் இடங்களைத் தேடவும்.
15.அதில் பச்சை நிறத்தில் காண்பிக்கும் பகுதியில் க்ளிக் செய்து உள்நுழையவும்.உங்களுக்கான ஸ்லாட்டைப் பதிவு செய்யவும்.
- நினைவிருக்கட்டும் இது18-44 வயதினருக்கான தடுப்பூசி பதிவு செய்துகொள்வதற்கான வழிமுறை. இந்தத் தடுப்பூசி இன்று முதல் (20-05-2021) கிடைக்கும்.