மேலும் அறிய

இன்னிக்கு ராணிப்பேட்டைக்கு ஜாக்பாட்.. நலத்திட்ட உதவிகளை வாரி வழங்கிய துணை முதல்வர்!

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 50 பயனாளிகளுக்கு மொத்தம் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான செயற்கை கால்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பொன் விழாவினை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற விழாவில் பொதுப்பணித் துறை சார்பில் ரூபாய் 19.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 13 அரசு பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி, பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 9.15 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 28 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 288 ஊராட்சிகளுக்கு தலா 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 364 கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்புகளை வழங்கி, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 7,165 பயனாளிகளுக்கு 37.79 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார்.

ராணிப்பேட்டைக்கு அடிச்சது ஜாக்பாட்:

இன்று நடைபெற்ற விழாவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 700 பயனாளிகளுக்கு 8.12 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூபாய் 18.36 லட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம், பழங்குடியினர் இல்லம் கட்டுவதற்கான ஆணைகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 2,229 மகளிருக்கு, ரூபாய் 17.98 கோடிக்கான வங்கி கடனுதவி காசோலைகளையும். உணவுப் பொருள் மற்றும் வழங்கல் துறை சார்பில் 178 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்:

மேலும், கூட்டுறவுத் துறை சார்பில் 716 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 7:43 கோடி ரூபாய்க்கான கடனுதவி காசோலைகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 70 பயனாளிகளுக்கு 1.09 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூபாய் 3.57 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 1 பயனாளிக்கு 2.23 லட்சம் ரூபாய் மானியத்தில் பவல்டில்லரையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 50 பயனாளிகளுக்கு மொத்தம் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான செயற்கை கால்கள், இருசக்கர வாகனம் மற்றும் வீல் சேர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு தொழில் வணிகத் துறை. மாவட்ட தொழில் மையம் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 36 பயனாளிகளுக்கு தொழில் தொடங்க 77.76 லட்சம் ரூபாய் மானிய உதவிகளையும், தாட்கோ சார்பில் நன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டம் மற்றும் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் சமூக பொருளாதார தொழில் முனைவு திட்டத்தின் கீழ் 22 பயனாளிகளுக்கு 48.08 லட்சம் ரூபாய்க்கான மானிய உதவிகளையும் வழங்கினார்.

தொடர்ந்து முன்னோடி வங்கி சார்பில் 8 பயனாளிகளுக்கு கறவை மாடு வாங்க 8 லட்சம் ரூபாய்க்கான கடனுதவிகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு ரூபாய் 33 ஆயிரம் மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் 33 பயனாளிகளுக்கு ரூபாய் 265 லட்சத்திற்கான மானிய உதவிகளையும், நகராட்சி திருவாகத் துறையின் சார்பில் 227 தூய்மை காவலர்களுக்கு ரூபாய் 6.81 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களையும் என மொத்தம் 7,165 பயனாளிகளுக்கு ரூபாய் 37.79 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழங்கினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

M. K. Alagiri : “மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி?” மன்னிப்பு கடிதம் கொடுத்த ஆதரவாளர்கள்..!
M. K. Alagiri : “மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி?” மன்னிப்பு கடிதம் கொடுத்த ஆதரவாளர்கள்..!
Tamilnadu Roundup: நிரம்பி வழியும் தமிழக நீர்நிலைகள்! தீவிரம் அடையும் மழை - தமிழகத்தில் இதுவரை!
Tamilnadu Roundup: நிரம்பி வழியும் தமிழக நீர்நிலைகள்! தீவிரம் அடையும் மழை - தமிழகத்தில் இதுவரை!
kalaignar kaivinai thittam 2024: எதுக்கு விஸ்வகர்மா? ”படிப்பு தான் முக்கியம் ப்ரோ” - அண்ணாமலை மீது திமுக அரசு அட்டாக்
kalaignar kaivinai thittam 2024: எதுக்கு விஸ்வகர்மா? ”படிப்பு தான் முக்கியம் ப்ரோ” - அண்ணாமலை மீது திமுக அரசு அட்டாக்
World Chess Championship : ”குகேஷிடம் வேண்டுமென்றே தோற்றார்” விசாரணை வேண்டும்! சர்ச்சையை கிளப்பும் ரஷ்யா..
World Chess Championship : ”குகேஷிடம் வேண்டுமென்றே தோற்றார்” விசாரணை வேண்டும்! சர்ச்சையை கிளப்பும் ரஷ்யா..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
M. K. Alagiri : “மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி?” மன்னிப்பு கடிதம் கொடுத்த ஆதரவாளர்கள்..!
M. K. Alagiri : “மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி?” மன்னிப்பு கடிதம் கொடுத்த ஆதரவாளர்கள்..!
Tamilnadu Roundup: நிரம்பி வழியும் தமிழக நீர்நிலைகள்! தீவிரம் அடையும் மழை - தமிழகத்தில் இதுவரை!
Tamilnadu Roundup: நிரம்பி வழியும் தமிழக நீர்நிலைகள்! தீவிரம் அடையும் மழை - தமிழகத்தில் இதுவரை!
kalaignar kaivinai thittam 2024: எதுக்கு விஸ்வகர்மா? ”படிப்பு தான் முக்கியம் ப்ரோ” - அண்ணாமலை மீது திமுக அரசு அட்டாக்
kalaignar kaivinai thittam 2024: எதுக்கு விஸ்வகர்மா? ”படிப்பு தான் முக்கியம் ப்ரோ” - அண்ணாமலை மீது திமுக அரசு அட்டாக்
World Chess Championship : ”குகேஷிடம் வேண்டுமென்றே தோற்றார்” விசாரணை வேண்டும்! சர்ச்சையை கிளப்பும் ரஷ்யா..
World Chess Championship : ”குகேஷிடம் வேண்டுமென்றே தோற்றார்” விசாரணை வேண்டும்! சர்ச்சையை கிளப்பும் ரஷ்யா..
Sanjeev Goenka : ”ஒரு வார்த்தை கூட பேசல! இனியும் பேச மாட்டாரு” தோனி குறித்து மனம் திறந்த  கோயங்கா..
Sanjeev Goenka : ”ஒரு வார்த்தை கூட பேசல! இனியும் பேச மாட்டாரு” தோனி குறித்து மனம் திறந்த கோயங்கா..
Year Ender 2023: முடியும் 2023, உலகையே ஆச்சரியப்படுத்திய சம்பவங்கள், ஆண்டின் டாப் 10 நிகழ்வுகள் என்ன?
Year Ender 2023: முடியும் 2023, உலகையே ஆச்சரியப்படுத்திய சம்பவங்கள், ஆண்டின் டாப் 10 நிகழ்வுகள் என்ன?
Breaking News LIVE: கோவில்பட்டியில் வீடுகளைச் சூழ்ந்த மழைநீர்! வெள்ளத்தில் மிதக்கும் பொருட்கள்!
Breaking News LIVE: கோவில்பட்டியில் வீடுகளைச் சூழ்ந்த மழைநீர்! வெள்ளத்தில் மிதக்கும் பொருட்கள்!
Dindigul Hospital: உயிர்களை பறித்த மருத்துவமனை, 7 பேர் பலி - திண்டுக்கல் மருத்துவமனை விபத்தில் நடந்தது என்ன?
Dindigul Hospital: உயிர்களை பறித்த மருத்துவமனை, 7 பேர் பலி - திண்டுக்கல் மருத்துவமனை விபத்தில் நடந்தது என்ன?
Embed widget