மேலும் அறிய

TamilNadu Coronavirus Case: தமிழ்நாட்டில் 17,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

தமிழ்நாட்டில் இன்று கொரோனா தினசரி பாதிப்பு 16 ஆயிரத்து 813 ஆக குறைந்துள்ளது. இன்று மட்டும் தமிழ்நாடு முழுவதும் 32 ஆயிரத்து 49 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 தமிழகத்தில் மாநில அரசு மேற்கொண்டு வரும் ஊரடங்கு உள்ளிட்ட தடுப்பு பணிகள் காரணமாக, கடந்த மாதம் 36 ஆயிரம் என்ற அளவில் இருந்த தினசரி பாதிப்பு தற்போது 17 ஆயிரம் என்ற அளவில் குறைந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று மட்டும் 16 ஆயிரத்து 813 ஆக உயர்ந்துள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 8 ஆயிரத்து 838 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,223 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் கோவை மாவட்டத்தில் இன்று மட்டும் 2 ஆயிரத்து 236 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தமாக கொரோனாவால் 5 லட்சத்து 22 ஆயிரத்து 52 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

TamilNadu Coronavirus Case: தமிழ்நாட்டில் 17,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

சென்னையைத் தவிர பிற 36 மாவட்டங்களில் 15 ஆயிரத்து 590 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 210 ஆக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் மட்டும் 13 லட்சத்து 53 ஆயிரத்து 435 ஆக பதிவாகி உள்ளது. பெண்கள் 9 லட்சத்து 55 ஆயிரத்து 365 நபர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 38 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இன்று மட்டும் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து 32 ஆயிரத்து 49 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 91 ஆயிரத்து 646 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக 400க்கு மேல் பதிவாகி வந்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை இன்று 358 ஆக குறைந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 135 பேரும், அரசு மருத்துவமனையில் 223 பேரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 658 ஆக பதிவாகி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 528 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மேலும் நீட்டிக்க மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget