Tamil Nadu Coronavirus LIVE :ஆந்திராவில் ஒரே நாளில் 11.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8,183 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. 18,232 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது, கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 89,009 ஆக குறைந்துள்ளது. கடந்த, 24 மணி நேரத்தில் 180 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.
ஆந்திராவில் ஒரே நாளில் 11.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி
ஆந்திராவில் கொரோனா பரவலில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்காக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆந்திராவில் இன்று மட்டும் அதிகபட்சமாக 11.85 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, ஒரே நாளில் 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் 8,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..
தமிழ்நாட்டில் 8,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..
புதுச்சேரியில் இன்று கொரோனா வைரசுக்கு 3 பேர் பலி
புதுச்சேரியில் இன்றைய நிலவரப்படி 251 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 847 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3 ஆயிரத்து 562 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் இன்று மட்டும் 3 நபரகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,723 ஆக உயர்ந்துள்ளது.
குழந்தைகள் கொரோனா பராமரிப்பு மையத்தில் முதல்வர் நேரில் ஆய்வு
கொரோனா மூன்றாவது அலையில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுவதற்காக சென்னை, எழும்பூரில் குழந்தைகள் கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த பரிசோதனை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியன குறித்தும் சுகாதாரத்துறையினரிடம் கேட்டறிந்தார்.
கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்குவது சாத்தியமற்றது - மத்திய அரசு
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், கொரோனாவால் உயிரிழந்த ஒவ்வொரு நபர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமானால் மாநில பேரிடர் மீட்பு நிதி முழுவதையும் பயன்படுத்த வேண்டியதாகிவிடும். மொத்த செலவினமும் அதிகரிக்க கூடும் என்பதால் அது சாத்தியமற்றது என்று தெரிவித்துள்ளது.