(Source: ECI/ABP News/ABP Majha)
TN Budget 2023 LIVE: வரும் நிதி ஆண்டில் ரூ.1.43 லட்சம் கோடி கடன் பெற அரசு திட்டம் என பட்ஜெட்டில் தெரிவிப்பு
TN Budget 2023 LIVE Updates: தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசித்து வருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
LIVE
Background
TN Budget 2023 LIVE
தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். வழக்கத்திற்கு மாறாக இந்த பட்ஜெட்டுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
குடும்ப தலைவிகளுக்கான உரிமைத் தொகை திட்டம்:
குடும்ப தலைவிகளுக்கான 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டம் குறித்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியிடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தது தான், பொதுமக்களிடையே பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு இந்த அளவிற்கு அதிகரிக்க காரணமாக உள்ளது. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில், அதற்கான அறிவிப்பு வரவில்லை. இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனங்கள் செய்து வந்தனர். இதற்கு மத்தியில், ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கத் தொடங்குவதற்கான தேதி குறித்த அறிவிப்பு பட்ஜெட் தாக்கலில் இடம்பெறும்” என்று உறுதியளித்தார்.
இதையடுத்து, உரிமை தொகை தொடர்பான அறிவிப்பு மட்டும் இன்றி, பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இதில் வெளியாக உள்ளன. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்ற விவரமும் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கும். மேலும், இந்த பட்ஜெட்டில் துறை சார்ந்த சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள்:
அதில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான திட்டம், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினரின் கோரிக்கைகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளையும் பட்ஜெட்டில் அரசு வெளியிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, நெல் கொள்முதல் விலை, மின்சார கட்டணம், புதிய பாடத்திட்டம், கேஸ் மானியம் என பல்வேறு எதிர்பார்ப்புகளும் பொதுமக்களிடையே நிலவுகிறது.
சுமார் 2 மணி நேரத்திற்கு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த பட்ஜெட் உரையை வாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது..
வேளாண் பட்ஜெட்:
இந்த கூட்டத்தில் சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும். அதில் என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும். சட்டப்பேரவையில் இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை தொடர்ந்து, நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
சுமார் 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. திமுக அரசை எதிர்த்தும், தமிழகத்தில் நிலவும் சட்ட-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். நிறைவு நாளில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கை தொடர்பாக விரிவாக பதில் அளிப்பார்.
ஏழை மக்களுக்கான நிதிநிலை அறிக்கை - அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையானது, ஏழை மக்களுக்கான நிதிநிலை அறிக்கை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
மதுரையில் மெட்ரோ: மக்களின் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி- எம்.பி., சு.வெங்கடேசன்
மதுரையின் வளர்ச்சிக்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வு காணப்பட “மதுரை மெட்ரோ திட்டம்” அறிவிக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 8500 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ள மாண்புமிகு @CMOTamilnadu அவர்களுக்கு மதுரை மக்களின் சார்பில்
— Su Venkatesan MP (@SuVe4Madurai) March 20, 2023
நன்றி. @pmoorthy21@ptrmadurai pic.twitter.com/z1mKsCNr1v
நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல்
நாளை தமிழ்நாட்டின் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது
பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 23 முதல் மார்ச் 27 வரை நடைபெறும்- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
தமிழ்நாடு பட்ஜெட் 23-24 மீதான விவாதம் மார்ச் 23 முதல் மார்ச் 27 வரை நடைபெறும்என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
வரும் ஏப்ரல் 21 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் - சபாநாயகர் அப்பாவு
வரும் ஏப்ரல் மாதம் 21 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.