மேலும் அறிய

Alcohol Poisoning: 'விழுப்புரத்தில் 14 பேரின் உயிரிழப்புக்கு காரணம் கள்ளச்சாராயம் அல்ல...' - தமிழக டி.ஜி.பி.

மரக்காணத்தில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என்றும், அதை குடித்ததே உயிரிழப்பிற்கு காரணம் என்றும் தமிழக டி.ஜி.பி. விளக்கம் அளித்துள்ளார்.

மரக்காணத்தில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என்றும், அதை குடித்ததே உயிரிழப்பிற்கு காரணம் என்றும் தமிழக டி.ஜி.பி. விளக்கம் அளித்துள்ளார். சித்தாமூர் மற்றும் மரக்காணத்தில் விற்கப்பட்ட விஷச்சாராயம் ஓரிடத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது என்றும் டி.ஜி.பி. கூறியுள்ளார்.  மேலும் சாராயம் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலையில், தொழிற்சாலையிலிருந்து, விஷச்சாராயத்தை திருடி சிலர் விற்றுள்ளனர். அதனால் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. எந்தத் தொழிற்சாலையிலிருந்த மெத்தனால் என்ற விஷச்சாராயம் வந்தது. அதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்று புலன் விசாரணை நடந்து வருகிறது என்றும் டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருக்கரணை கிராமம் மற்றும் பேரம்பாக்கம் கிராமங்களில் கைப்பற்றப்பட்ட சாராயம் தடய ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வறிக்கையில் இது மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல என்பதும் ஆலைகளில் பயன்படுத்தப்படும். மெத்தனால் என்ற விஷச்சாராயம் என்பதும் தெரியவந்தது.

இந்த மெத்தனால் என்ற விஷச்சாராயத்தை ஓதியூரைச் சேர்ந்த சாராய வியாபாரி அமரன் என்பவர் விற்பனை செய்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் அவர் முத்து என்பவரிடமிருந்து வாங்கியுள்ளதாகவும், முத்து பாண்டிச்சேரி எழுமலை என்பவரிடமிருந்து வாங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதுபோல சித்தாமூர், பெருக்கரணை மற்றும் பேரம்பாக்கத்தில் விஷச்சாராய' விற்பனை செய்த அமாவாசை' என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலு என்பவர் பனையூர் ராஜேஷ் என்பவரிடமிருந்து வாங்கியதாக கூறியுள்ளார். இவர் மேற்படி விஷச்சாராயத்தை விளம்பூர் விஜி என்பவரிடமிருந்து வாங்கியதாகத் தெரிவித்தார். விளம்பூர் விஜி, விஷச்சாராயத்தை பாண்டிச்சேரி ஏழுமலையிடமிருந்து வாங்கியுள்ளார். ஆக சித்தாமூரில் விற்கப்பட்ட விஷச்சாராயமும், மரக்காணத்தில் விற்கப்பட்ட விஷச்சாராயமும் ஓரிடத்திலிருந்து வந்தது என புலனாகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு மட்டும் 140,649 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 139,697 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 37217 லிட்டர் விஷச்சாராயம் கைப்பற்றப்பட்டு 2957 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த 2023ஆம் ஆண்டு மட்டும் இதுவரையிலும் 55,474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 55,173 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு. இதுவரையிலும் 255,078 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட 69 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 1077 மோட்டார் வாகனங்கள் இந்த ஆண்டுமட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் கள்ளச் சாராய வழக்குகளில் ஈடுபட்ட 79 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது பெருமளவு தடுக்கப்பட்டதாலும், அண்டை மாநிலங்களுக்கு கள்ளச்சாராயம் கடத்தப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்படுவதாலும், சாராயம் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலையில், தொழிற்சாலையிலிருந்து, விஷச்சாராயத்தை திருடி சிலர் விற்றுள்ளனர். அதனால் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. எந்தத் தொழிற்சாலையிலிருந்த மெத்தனால் என்ற விஷச்சாராயம் வந்தது. அதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்று புலன் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகல
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகல
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகல
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகல
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
Embed widget