மேலும் அறிய

செந்தில் பாலாஜிக்கு இன்று ஜாமின் கிடைக்குமா? சற்று நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

தமிழ்நாட்டின் மின்சார துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் செந்தில் பாலாஜி. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் இவர் கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜியின் கைது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா?

இதையடுத்து, ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஜாமின் மனு கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது, அமலாக்கத்துறை மற்றும் செந்தில் பாலாஜி என இரண்டு தரப்பு வாதங்களையும் நீதிமன்றம் கேட்டது. பின்னர், இந்த வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்த நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கின் வாதங்களை ஏற்கனவே நீதிபதிகள் கேட்டுவிட்டதால் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கடந்த ஓராண்டாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா? என்று அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இன்று தீர்ப்பு:

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. கடந்த ஓராண்டாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி தனது உடல்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காட்டி ஜாமின் கோரிய போதும் அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை. மேலும், அவர் தனது அமைச்சர் பதவியையும் தொடர் அழுத்தம் காரணமாக ராஜினாமா செய்தார்.

செந்தில் பாலாஜி கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அப்போது, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறை அவரை கடந்தாண்டு கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பிறகு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்கா்க செந்தில் பாலாஜி கடந்தாண்டு அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..

TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?

சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ

ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை

24 மணி நேரமும் மதுபானக்கூடம் செயல்படுவதாக கூறி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது

Kapil dev net worth : 10 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள்.. முதல் உலகக்கோப்பை வெற்றி  கேப்டனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?

'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

Embed widget