மேலும் அறிய

இ-சேவை மையங்களில் அதிக கட்டணம் வசூலித்தால்.....அ மைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை

மின் – அலுவலகம் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக வருவாய்துறையை சேர்ந்த 104 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மின் மாவட்ட மேலாளர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட மின்-அலுவலகம் நடைமுறைபடுத்துதல் தொடர்பாக  தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆர்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் க.கவிதா, அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவர் குறிஞ்சி என்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இ-சேவை மையங்களில் அதிக கட்டணம் வசூலித்தால்.....அ மைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை

கரூர் மாவட்டத்தில் மின் – அலுவலகம் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சிகள் உள்ளிட்ட 61 வெவ்வேறு அலுவலகங்களில் பணிபுரியும் 548 அலுவலர்களுக்கு தனியான மின் அஞ்சல் முகவரிகள் உருவாக்கப்பட்டு, அவர்கள் தங்களது மின்னணு கையொப்பம் அளிக்க மின்னணு பயனர் முகவரி (USER ID) உருவாக்கப்பட்டுள்ளது.  மின் – அலுவலகம் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக வருவாய்துறையை சேர்ந்த 104 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மின் மாவட்ட மேலாளர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு துறை அலுவலர்களுக்கு விரைவில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.  தற்பொது வரை 4472 தபால்கள் மின் – அலுவலகத்தில் வாங்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் மின் – அலுவலகத்தில் 2168 கோப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. தொடரந்து தினசரி வரப்படும் தபால்களை  மின் – அலுவலகத்தில் பதிவேற்றம் செய்வதற்கு சுழற்சி முறையில் 6  தட்டச்சர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது, மேலும், மின் – அலுவலகம் நடைமுறை படுத்தவதற்கு கூடுதல் தேவைகளை குறித்து  அலுவலர்களிடம்   கேட்டறிந்தனர்.

இ-சேவை மையங்களில் அதிக கட்டணம் வசூலித்தால்.....அ மைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை

இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் பேசுகையில், முதலமைச்சரின் சிறப்பான நடவடிக்கைகளால் மின் ஆளுமை திட்டங்களில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் 17வது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது 2 இடத்தினை அடைந்துள்ளது. மிக விரைவில் முதல் இடம் பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சரி சமமான வாழ்க்கைத்தரம் உருவாகியுள்ளது. 

இ-சேவை மையங்களில் அதிக கட்டணம் வசூலித்தால்.....அ மைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை

தகவல் தொழில்நுட்பத் துறை மூன்று இலக்குகளை கொண்டு செயலாற்றி வருகிறது. இதற்காக இ-சேவை மையங்கள் மேம்படுத்தப்பட்டு, மென்பொருள் தரம் உயர்த்தப்பட்டு, 200க்கும் மேற்பட்ட அரசுத்துறை சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் 300க்கும் மேற்பட்ட இ-சேவை மையங்களாக அதிகரிக்கும். காகிதம் இல்லா அலுவலகமாக மின் அலுவலகம் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், கோப்புகள் மீது மிக விரைவில் நடவடிக்கை எடுக்கவும், விண்ணப்பத்தின் தற்போதைய நிலை குறித்து விண்ணப்பதாரர் தெரிந்து கொள்ளவும் வழிவகை செய்யப்படும். அரசின் பல்வேறு துறைகளில் உள்ள தரவுகளை ஒருங்கிணைத்து எந்த திட்டத்திற்கு எந்த பயனாளிகள் தகுதியுடையவர்கள் என்பதை சரி பார்க்க முடியும்.

இ-சேவை மையங்களில் அதிக கட்டணம் வசூலித்தால்.....அ மைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை

இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது அரசை தேடி மக்கள் வருகின்ற நிலை மாறி, 'மக்களை தேடி அரசு திட்டங்கள்' என்ற சூழல் உருவாகும். தமிழகத்தில் "டன் பண்ட்" மூலமாக பைபர் நெட்வொர்க் இணைப்பு வழங்கும் பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. இப்பணிகள் நிறைவடைந்ததும் இணைப்பு பிரச்சனை இருக்காது. பல மாவட்டங்களில் இ-சேவை மையங்களில் அதிக கட்டணம் வசூலித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். அவர்களுடைய உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த தொகையை விட அதிகமான கட்டணம் வசூலித்தால், உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

மதுரை வேலைவாய்ப்பு: போலி அறிவிப்பால் ஏமாற வேண்டாம்... மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை !
மதுரை வேலைவாய்ப்பு: போலி அறிவிப்பால் ஏமாற வேண்டாம்... மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை !
திருமணம் மீறிய உறவு !! கள்ளத் தொடர்பை துண்டித்ததால் கொடூரம் !! பெண் ஊழியருக்கு தீவைப்பு
திருமணம் மீறிய உறவு !! கள்ளத் தொடர்பை துண்டித்ததால் கொடூரம் !! பெண் ஊழியருக்கு தீவைப்பு
ஷாப்பிங் , காளஹஸ்தி சாமி தரிசனம் !! ஒரே இரவில் SI-க்கு நடந்த கொடூரம் !! பின்னணி என்ன ?
ஷாப்பிங் , காளஹஸ்தி சாமி தரிசனம் !! ஒரே இரவில் SI-க்கு நடந்த கொடூரம் !! பின்னணி என்ன ?
ஒரிஜினல் கேங்ஸ்டர் வந்துட்டான்.. அறிமுகமாகியது Mahindra Thar OG கார் - விலை எவ்ளோ?
ஒரிஜினல் கேங்ஸ்டர் வந்துட்டான்.. அறிமுகமாகியது Mahindra Thar OG கார் - விலை எவ்ளோ?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK : 5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
Gem Veeramani : ‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Nirmalkumar: ”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
Iran Vs America: '7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
'7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
Embed widget