மேலும் அறிய

NEET Suicide: நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி புனிதா தற்கொலை.. தொடரும் நீட் சோகம்..

நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மருத்துவ இடம் கிடைக்காத மாணவி மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள குப்பதாசன்வளவு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மனைவி ஆனந்தி. செந்தில் குமார் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் அவரது மனைவி ஆனந்தி கொங்கணாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அகிலா (20) மற்றும் புனிதா (19) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். அகிலா திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். புனிதா 2022-2023 கல்வியாண்டில் எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றார். பின்னர் மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார்.

அண்மையில் நடந்து முடிந்த மருத்துவ கலந்தாய்வில் மாணவி புனிதாவிற்கு மதிப்பெண் குறைந்ததால் மருத்துவர் இடம் கிடைக்கவில்லை. இதனை அடுத்து மாணவி புனிதாவிற்கு நேற்று முன்தினம் நடைபெற்ற பாரா மெடிக்கல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்றார். இதிலும் மாணவி புனிதாவிற்கு அரசு ஒதுக்கிட்டிற்கான இடம் கிடைக்காத நிலையில் மனம் உடைந்த மாணவி புனிதா நேற்று யாரும் இல்லாத நிலையில் தனது வீட்டில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடப்பாடி காவல் துறையினர் மாணவி புனிதாவின் உடலை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவி புனிதாவின் இறப்பு குறித்து எடப்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மருத்துவ இடம் கிடைக்காத மாணவி மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Budget 2026: இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
Tamil Nadu Budget 2026: இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
Embed widget