மேலும் அறிய

Sterlite Reopen : ’ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நிர்வாகம் கடும் முயற்சி’ சிறப்பு சட்டம் இயற்ற அரசுக்கு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்..!

Sterlite Plant Reopening : ’உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெறும் நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில் சிறப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும்’

தூத்துக்குடி என்றால் கடல், உப்பு, முத்து, துறைமுகம் என்ற அடையாளங்களும் பாரதியார், வ.உ.சி., கட்டபொம்மன் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களும் திருச்செந்தூர் முருகன் கோயிலும் மக்கள் மனதில் உதிக்கும். ஆனால், இப்போதெல்லாம் தூத்துக்குடி என்றாலே ஸ்டெர்லைட் ஆலையும் அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடும்தான் நினைவுகளில் நிழலாடுகிறது. 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட காரணமாக இருந்தது ஸ்டெர்லைட் ஆலை. அதுமட்டுமில்லாமல், எண்ணற்றோர் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். சுற்றுச் சூழல் மீட்டுருவாக்கம் செய்ய முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறது.  அப்படிப்பட்ட, ஆலையை கடந்த 2018ல் பூட்டி சீல் வைத்தது தமிழ்நாடு அரசு.Sterlite Reopen : ’ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நிர்வாகம் கடும் முயற்சி’ சிறப்பு சட்டம் இயற்ற அரசுக்கு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்..!

ஆலையை மீண்டும் திறக்க தீவிர முயற்சி

5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பல்வேறு வழிகளில் தீவிர முயற்சி செய்துவருகிறது ஸ்டெர்லைட் நிர்வாகம். ஆலையை மூடியதற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் வரை சென்று நடத்திவரும் ஸ்டெர்லைட், ஆலையை மூடியதால் இந்தியாவின் காப்பர் உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற வாதத்தை முன் வைத்து வழக்காடி வருகிறது.

ஒரு தரப்பு மக்களை பயன்படுத்துகிறதா வேதாந்தா நிறுவனம் ?

அதே நேரத்தில், பல்வேறு தந்திரங்களையும் தங்களுடைய பண பலத்தையும் பயன்படுத்தி ஆலையை திறக்க அனைத்து உத்திகளையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் உபயோகித்து வருவதாக பதபதைக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள். அந்த பகுதி மக்கள் சிலரை தூண்டிவிட்டு ஸ்டெர்லை ஆலை இல்லாமல் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புதிய பிரச்னையை உருவாக்கி, ஆலைக்கு ஆதரவான மனநிலையை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. உண்மையில், மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் தங்களது எதிர்கால வாழ்க்கை சூனியமாகிவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் அவர்கள். ஆனால், அப்படி ஒரு நிலை வந்தால் அதனை எதிர்த்து மீண்டும் களமாடவும் தூத்துக்குடி இளைஞர்கள் தயாராக இருப்பதாக சொல்கின்றனர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர்.

இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜனிடம் கேட்டபோது,

’ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்கவே கூடாது. அந்த நிலைபாட்டில் இருந்து துளியும் பின்வாங்கிட கூடாது. ஏற்கனவே, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமெல்லாம் ஆய்வு செய்து, ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிப்பதாக இருக்கிறது என்ற அறிக்கையின் அடிப்படையில்தான் மூடப்பட்டிருக்கிறது. அதோடு,  தொழில் என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது. தமிழ்நாட்டில் எந்த மாதிரியான தொழிற்சாலைகளை அனுமதிக்க வேண்டும், அனுமதிக்க கூடாது என்பதை முடிவெடுக்க மாநில அரசுக்கு முழு அதிகாரமும் உரிமையும் இருக்கிறது. அதனடிப்படையிலும் சரி, தாமிர உருக்கு ஆலை சுற்றுச்சூழலுக்கு தீவிரமான மாசை ஏற்படுத்துபவை என்ற காரணத்தினாலும் சரி, மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது.

சுந்தர்ராஜன், பூவுலகு நண்பர்கள் அமைப்பு
சுந்தர்ராஜன், பூவுலகு நண்பர்கள் அமைப்பு

’அவசர சிறப்பு சட்டம் இயற்றுக’ – அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் வலியுறுத்தல்

 இருப்பினும், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை நியமிக்கும் நடவடிக்கைகளில் உச்சநீதிமன்றம் இறங்கியிருப்பதால், தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கொள்கை முடிவு எடுத்து நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அவசர சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.

காப்பர் உற்பத்தி பின்னடைவு - ஸ்டெர்லைட் நிர்வாகம் சொல்வது உண்மையா ?

ஸ்டெர்லைட் ஆலை உருவாக்கிய காப்பரில் 40 %தான் இங்கு பயன்பட்டது. மீதம், 60 % ஏற்றுமதிதான் செய்யப்பட்டது. தாமிர தாதுக்களை ஆஸ்திரேலியா, தாஸ்சானியா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தூத்துக்குடியில் உருக்கி பயன்படுத்துவதால், இந்த உருக்கு ஆலை மூலம் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது. தாதுக்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளிலேயே உருக்காலை அமைத்து காப்பர் உருவாக்காமல், தூத்துக்குடியில் வந்து ஆலையை அமைத்து உருக்கி எடுப்பது எதற்காக ? தமிழக மக்களை எளிதாக ஏமாற்றிவிடலாம் என்பதாலா ? அவர்களுக்கு எந்த சீர்கேடு ஏற்பட்டாலும் யாரும் கேட்க மாட்டார்கள் என திமிரினாலா ? அல்லது எந்த சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டாலும் பணம் கொடுத்து சரிகட்டிவிடலாம் என்ற ஆணவத்தினாலா ?

இப்படிப்பட்ட அபாயகரமான, மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலை தமிழ்நாட்டில் இயங்க கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றார்’

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget