மேலும் அறிய

Tamil Nadu Scientist: தமிழக விஞ்ஞானிகளை அங்கீகரித்த மாநில அரசு.. ”மிஸ்” ஆன சுப்பையா அருணன்! பரிசீலிக்குமா அரசு?

மங்கள்யான் திட்ட இயக்குனர் அருணன் சுப்பையாவிற்கு தமிழக அரசு உரிய அங்கீகாரம் வழங்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலியில் பிறந்து இஸ்ரோவின் மங்கள்யான் திட்ட இயக்குனராக செயல்பட்ட  அருணன் சுப்பையாவிற்கு தமிழக அரசின் அங்கீகாரம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

விஞ்ஞானிகளுக்கான தமிழக அரசின் அங்கீகாரம்:

விண்வெளித்துறையில் சாதனை படைத்த தமிழ்நாடு விஞ்ஞானிகளுக்கு அரசு தரப்பில் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.  உயர் கல்வித்துறையின் சார்பில் "ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்" என்ற தலைப்பில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது.

இஸ்ரோ முன்னாள் தலைவர்கள் மயில்சாமி அண்ணாதுரை, சிவன் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நாராயணன், ராஜராஜன், சங்கரன், ஆசிர் பாக்கியராஜ், வனிதா, நிகர் ஷாஜி, சந்திரயான் -3 திட்டத்தின் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார். அவர்களுக்கு தலா, 25 லட்ச ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது.

விடுபட்ட தமிழக மூத்த விஞ்ஞானி:

இந்நிலையில் தான், தமிழகத்தைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானியான சுப்பையா அருணனிற்கு இந்த அங்கீகாரம் கிடைக்காதது பேசுபொருளாகியுள்ளது. மங்கள்யான் திட்ட இயக்குனராக பணியாற்றியுள்ள இவர், பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். மூத்த விஞ்ஞானியான நம்பி நாராயணின் மருமகன் தான் சுப்பையா அருணன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட விஞ்ஞானிகள் அனைவரும் கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் விண்வெளி ஆராய்ச்சிகளில் சாதனை படைத்தவர்கள். ஆனால், சுப்பையா அருணன் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்ரோவில் சேர்ந்து பணியாற்றியது குறிப்பிடத்தகக்து. அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த சுப்பையா அருணன்?

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி கிராமத்தை சேர்ந்தவர் தான் சுப்பையா அருணன். இவரது தந்தை சுப்பையா, ஏர்வாடி, வள்ளியூர், கூடங்குளம் பள்ளிகளில் தலைமையாசிரியராக பணியாற்றியுள்ளார். இவரது தாயார் மாணிக்கம் அம்மாள் ஆவார். அருணன் திருக்குறுங்குடி மற்றும் பாளையங்கோட்டையில் பள்ளிப் படிப்பை பூர்த்தி செய்தார். பின்னர், கோவை கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றார்.  தொடர்ந்து, 1984ம் ஆண்டு திருவனந்தபுரம் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியை துவக்கினார். பின்பு பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் சேர்ந்து தனது பணிகளை தொடங்கினார்.

மங்கள்யான் திட்டம்:

படிப்படியாக முன்னேற்றம் கண்ட சுப்பையா அருணன், செவ்வாய் கிரகத்தை ஆராயும் இஸ்ரோவின் மங்கள்யான் திட்டத்தின் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டார். இஸ்ரோவின் பல்வேறு பிரிவு வல்லுநர்களில் பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடன் கலந்து ஆலோசித்துத் திட்டமிட்டு மொத்த திட்டப் பணிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தினார்.

அதேநேரம், மங்கள்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்தும் நேரத்தில், சுப்பையா அருணன் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், மங்கள்யான் திட்டம் வெற்றி பெற்று, சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு அங்கீகாரம் பெற்று தந்தது. இவர் தொடர்பாக தமிழ்நாடு அரசின் 9ம் வகுப்பு பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் தான், "ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்" என்ற தலைப்பிலான தமிழ்நாடு அரசின் பாராட்டு விழாவில், சுப்பையா அருணனுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது பேசுபொருளாகியுள்ளது. தமிழக அரசு இதுதொடர்பாக பரிசீலித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

சுப்பையா அருணனின் குடும்ப விவரம்:

மூத்த விஞ்ஞானியான நம்பி நாராயணனின் மகள் கீதாவை தான், சுப்பையா அருணன் திருமணம் செய்துள்ளார். இவர்கள், குடும்பத்துடன் பெங்களூருவில் வசிக்கின்றனர். கீதா பள்ளி ஆசிரியையாக இருந்தார். அருணனின் அண்ணன் நல்லமுத்து வனவிலங்கு புகைப்பட கலைஞராகவும், தம்பி குமரன் சென்னையில் சினிமா இசை அமைப்பாளராகவும் உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: 10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் காந்தியின் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
Breaking News LIVE: அனல் பறந்த மக்களவை விவாதம் - மக்களவையில் பிரதமர் மோடி இன்று ப்சொல்லப்போவது என்ன?
Breaking News LIVE: அனல் பறந்த மக்களவை விவாதம் - மக்களவையில் பிரதமர் மோடி இன்று ப்சொல்லப்போவது என்ன?
ICC T20 WC Team: டி20 உலகக் கோப்பை தொடருக்கான கனவு அணி.. ரோஹித், பாண்டியாவிற்கு இடம்.. கோலிக்கு இடமில்லை!
ICC T20 WC Team: டி20 உலகக் கோப்பை தொடருக்கான கனவு அணி.. ரோஹித், பாண்டியாவிற்கு இடம்.. கோலிக்கு இடமில்லை!
Vidamuyarchi Update : முழுவீச்சில் 'விடாமுயற்சி' ஷூட்டிங்... இத்தனை மணிநேரம் விடாம நடக்குதா?
முழுவீச்சில் 'விடாமுயற்சி' ஷூட்டிங்... இத்தனை மணிநேரம் விடாம நடக்குதா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK vs PMK : அடித்து விரட்டிய திமுக! பழி வாங்கிய பாமக! அழுது புலம்பும் ஜெகத்ரட்சகன்! நடந்தது என்ன?DK Shivakumar vs Siddaramaiah : துணை முதல்வர் பதவிக்கு ஆப்பு?வேட்டு வைக்கும் சித்தராமையா!MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: 10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் காந்தியின் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
Breaking News LIVE: அனல் பறந்த மக்களவை விவாதம் - மக்களவையில் பிரதமர் மோடி இன்று ப்சொல்லப்போவது என்ன?
Breaking News LIVE: அனல் பறந்த மக்களவை விவாதம் - மக்களவையில் பிரதமர் மோடி இன்று ப்சொல்லப்போவது என்ன?
ICC T20 WC Team: டி20 உலகக் கோப்பை தொடருக்கான கனவு அணி.. ரோஹித், பாண்டியாவிற்கு இடம்.. கோலிக்கு இடமில்லை!
ICC T20 WC Team: டி20 உலகக் கோப்பை தொடருக்கான கனவு அணி.. ரோஹித், பாண்டியாவிற்கு இடம்.. கோலிக்கு இடமில்லை!
Vidamuyarchi Update : முழுவீச்சில் 'விடாமுயற்சி' ஷூட்டிங்... இத்தனை மணிநேரம் விடாம நடக்குதா?
முழுவீச்சில் 'விடாமுயற்சி' ஷூட்டிங்... இத்தனை மணிநேரம் விடாம நடக்குதா?
Bottle Radha Teaser : பா. ரஞ்சித் தயாரிப்பில் 'பாட்டில் ராதா' டீசர் வெளியானது.. கிக்கா என்ன இருக்கு?
Bottle Radha Teaser : பா. ரஞ்சித் தயாரிப்பில் 'பாட்டில் ராதா' டீசர் வெளியானது.. கிக்கா என்ன இருக்கு?
ISRO Somnath: விண்வெளி நிலையத்தில் சிக்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் ! இஸ்ரோ தலைவர் தெரிவித்தது என்ன?
ISRO Somnath: விண்வெளி நிலையத்தில் சிக்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் ! இஸ்ரோ தலைவர் தெரிவித்தது என்ன?
Rasipalan: கன்னிக்கு மதிப்பு, சிம்மத்துக்கு கவனம்-  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: கன்னிக்கு மதிப்பு, சிம்மத்துக்கு கவனம்- உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Embed widget