Fishermens Arrest: தமிழக மீனவர்கள் 11 பேர், இலங்கை கடற்படையினரால் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 11 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய பெருங்கடலில் இலங்கை கடற்படையில் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே வருகிறது. தொடர்ந்து, தமிழக எல்லை பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்தும், துப்பாக்கியால் சுட்டும் எல்லை மீறி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்து செல்கின்றனர்.
இந்தநிலையில், இன்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 11 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளது. பருத்தித்துறை கிழக்கு கடற்பரப்பில் கைதான தமிழக மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதேபோல், கடந்த 18ம் தேதி தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த இலங்கை கடற்படையினர் எல்லை கடந்து மீன் பிடித்ததாக தெரிவித்து தமிழக மீனவர்களை சரமாரியாக தாக்க தொடங்கினர்.
மேலும், எந்தவொரு முன்னறிப்பும் வழங்காமல் வழக்கம்போல் மீன் பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்களை கற்கள் மற்றும் கம்புகளை கொண்டு இலங்கை கடற்படை தாக்கியது. இந்த திடீர் தாக்குதலால் 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமடைந்தும், 12 மீனவர்கள் படுகாயமும் அடைந்தனர்.