மேலும் அறிய

Pakistan Accounts | பிபின் ராவத் இறப்பு குறித்து அவதூறு: பாகிஸ்தான் ட்விட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு!

தலைமை தளபதி உயிரிழந்த சம்பவம் இந்திய ராணுவத்தின் ஒழுக்கமற்ற, திறனற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்குதல் என்ற நீண்ட கால முயற்சிக்கு பலத்த அடியாக இது உள்ளது - சீனா

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் விபத்தில் பொய்யான தவறுகளை பரப்பி வரும் பாகிஸ்தான் சார்ந்த இரண்டு think tank-ஐ(என்ஜிஓ.,க்கள்) விசாரிக்க தமிழ்நாடு சிபி- சிஐடி விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளது. 

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தமிழகத்தின் குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணமடைந்தார். நீலகிரி மலைப்பகுதியில் அமைந்துள்ள வெலிங்டன் பாதுகாப்பு சேவை பயிற்சி கல்லூரியில் பயிற்றுநர்களுக்கும், பயிலும் மாணவர்களுக்கும்  உரையாற்ற வந்த போது இந்த துயரசம்பவம் நடைபெற்றது. ஜெனரல் பிபின் ராவத், துணைவியார் மதுலிகா ராவத் மற்றும் உடன் பயணித்த 11 படை வீரர்களும் உயிரிழந்ததனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த குரூப் கேப்டன் வருண்சிங் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.   

Pakistan Accounts | பிபின் ராவத் இறப்பு குறித்து அவதூறு: பாகிஸ்தான் ட்விட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு!

இந்த கோர சம்பவம் ஏற்படுத்திய வடுக்களை மறக்க முடியாமல் உயிரிழந்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லாடி வருகின்றனர். இதுஒருபுறமிருக்க, ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி மற்றும் பொய்யான தகவல்கள் தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த  விபத்துக்கு பாகிஸ்தான் மற்றும் சீனாவின் சதிச் செயல் இருக்கும் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சில மூத்த பத்த்ரிகையாளர்கள் சுமத்தத் தொடங்கினர். இந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு தமிழகத்தில் செயல் பட்டு வரும் சில தீவிரவாத கும்பல்களுடன் தொடர்பு இருப்பதாகவும், தமிழ்நாடு பிரிவிணைவாதிகளின் கூடாரமாகி விட்டதாகவும் சில விஷமத்தனமான கருத்துகள் பரப்பட்டன. மேலும், வடநாட்டில் செயல்பட்டு வரும் சில ஊடகங்கள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசம் உள்ளடக்கிய அகண்ட பாரதம்- சாத்தியாமா? என்ற தோனியில் விவாதத்தை எழுப்பியது.   

இதே போன்ற, ஆதாரமற்ற, விஷத்தனமான கருத்துகளை பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஊடகங்களும், அமைப்புகளும்  பரப்பி வருகின்றன. Pakistan Strategic Forum என்ற thinktank அமைப்பு ஹெலிகாப்டர் விபத்தை ரபேல் விமான ஒப்பந்தத்துடன் முடுச்சு போட்டுள்ளது. அதாவது, இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து ரபேல் விமானங்களை வாங்க பிபின் ராவத் விரும்பியதாகவும், ரபேல் விமான ஒப்பந்தங்களில் உள்ள முறைகேடுகளை மறைக்கவே ராவத் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும்,  காட்டேரி மலை பகுதியில் தாழ்வாக பறந்துகொண்டிருந்த வீடியோவை குறிப்பிட்டு, இந்த நிச்சயாக உள்விவகார பிரச்சனை தான் (insider job) என்றும் கூறியுள்ளது. 

Pakistan Accounts | பிபின் ராவத் இறப்பு குறித்து அவதூறு: பாகிஸ்தான் ட்விட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு!

அதே போன்று, World conflicts Monitoring Center என்ற மற்றொரு think tank அமைப்பும் இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பிரிவினைவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக ஒரு டிவீட்டில் தெரிவித்துள்ளது. மற்றொரு பதிவில், விமான விபத்தில் பலியானவர்களில் ஏன் உயர் சாதி வகுப்பினர் இல்லை?  என்ற குதற்கமான கேள்வியை எழுப்பியுள்ளது. 
 
இதற்கிடையே, சீனா அரசின் அதிகாரப்பூர்வ  நாளிதழான 'global times' தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் விமான விபத்து  குறித்து சில பொருத்தமற்ற கருத்துக்களை  பதிவிட்டுள்ளது. 'India defense chief’s death shows flaws in Indian military, ‘deals heavy blow’ to its modernization' என்ற கட்டுரையில், தலைமை தளபதி உயிரிழந்த சம்பவம் இந்திய ராணுவத்தின் ஒழுக்கமற்ற, திறனற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்குதல் என்ற நீண்ட கால முயற்சிக்கு பலத்த அடியாக இது உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.        
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழகம் வருகை ஒத்திவைப்பு! எப்போது தெரியுமா?
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழகம் வருகை ஒத்திவைப்பு! எப்போது தெரியுமா?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழகம் வருகை ஒத்திவைப்பு! எப்போது தெரியுமா?
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழகம் வருகை ஒத்திவைப்பு! எப்போது தெரியுமா?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
Vikravandi Bypoll: அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
Bakrid 2024: பக்ரீத் கொண்டாட்டம்! தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கில் ஆடுகள் விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி
Bakrid 2024: பக்ரீத் கொண்டாட்டம்! தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கில் ஆடுகள் விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
Embed widget