மேலும் அறிய

Diwali Special Buses: நெருங்கும் தீபாவளி; பயணிகளே மொத்தம் 10, 975 சிறப்பு பேருந்துகள் - ஊருக்கு போக ரெடியாகுங்க

வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் பண்டிகை காலங்களில் இயக்கப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

தீபாவளி கொண்டாட்டம்:

இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று “தீபாவளி”. கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் விதமாக தான் இப்பண்டிகை பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்படுவதாக ஐதீகம். நடப்பாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இப்பண்டிகை வருவது ஒருபுறம் கவலையாக இருந்தாலும், வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு சென்று குடும்பத்துடன் கொண்டாடுவதில் இருக்கும் மகிழ்ச்சிக்கே அளவில்லை. 

அந்த வகையில் வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் பண்டிகை காலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. ரயில்களில் 120 நாட்களுக்கு முன்னரே  முன்பதிவு செய்யும் வசதி இருக்கும் நிலையில், டிக்கெட்டுகள் அனைத்தும் கடந்த ஜூலை மாதமே காலியாகி விட்டது. இதனால் சிறப்பு பேருந்துகளை நம்பி லட்சக்கணக்கான வெளியூர் மக்கள் உள்ளனர். அதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

10 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்:

அதன்படி, நவம்பர் 9 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை சேர்த்து, நவம்பர் 9 ஆம் தேதி 3,465 பேருந்துகளும், 10 ஆம் தேதி 3,395 பேருந்துகளும், 11 ஆம் தேதி 3,515 பேருந்துகள் என 10,975 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. அதன்படி சிறப்பு பேருந்துகள் மூலம் 6 லட்சம் பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தீபாவளி பண்டிகை முடிந்து நவம்பர் 13 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு

சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கூட்ட நெரிசலின்றி பயணிகள் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையம் தவிர்த்து 5 தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைக்கப்படுகிறது.

அதன்படி, 

  • பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ECR வழியாக புதுச்சேரி, கடலூர் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழகம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி செல்லும் பேருந்துகள், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரிகடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வேலூர். ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர் காஞ்சிபுரம் செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி செல்லும் செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Deepthi Jeevanji Video: 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Liquid Nitrogen: பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Deepthi Jeevanji Video: 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Liquid Nitrogen: பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
Fact Check: மெட்ரோ ரயில் விளம்பரம் -  மோடியுடன் சிங்கப்பூர் மெட்ரோ புகைப்படத்தை பயன்படுத்தியதா பாஜக?
மெட்ரோ ரயில் விளம்பரம் - மோடியுடன் சிங்கப்பூர் மெட்ரோ புகைப்படத்தை பயன்படுத்தியதா பாஜக?
PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Embed widget