ராமஜெயம் கொலை வழக்கு: ரூ. 50 லட்சம் சன்மானம் உறுதி... ஆனால் கண்டிஷன் போடும் காவல்துறை
ராமஜெயம் கொலை வழக்கானது நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சிறப்பு புலனாய்வு குழு தங்கள் தரப்பில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.
திருச்சி அமைச்சர் கே.என் நேருவின் தம்பியும் தொழிலதிபருமான ராம ஜெயம் கொலை வழக்கு தொடர்பான சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரனை சூசுபிடித்துள்ள நிலையில் குற்றவாளிகள் தொடர்பாக தகவல் தருபவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்க உள்ளாதாக நேற்று நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்த நிலையில் எஸ்.பி ஜெயக்குமார் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
ராமஜெயம் கொலை வழக்கை தற்போது காவல்துறை கண்காணிப்பாளா் ஜெயகுமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. அதில் கடந்த மாதம் விசாரணையை துவங்கிய தனிப்படை பல்வேறு தகவல்களை சேகரித்துள்ளனா். இந்நிலையில், ராமஜெயம் கொலை வழக்கானது நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சிறப்பு புலனாய்வு குழு தங்கள் தரப்பில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.
#BREAKING | 50 லட்சம் வெகுமதி
— ABP Nadu (@abpnadu) April 23, 2022
ராமஜெயம் கொலை வழக்கு குறித்து தகவல் தருபவர்களுக்கு 50 லட்ச ரூபாய் பண வெகுமதி வழங்கப்படும்..!
சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி. ஜெயக்குமார் அறிவிப்பு
துப்பு தருபவர்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்படும் எனவும் உறுதி#RamajeyamMurderCase pic.twitter.com/9iejVWhBlf
அவா்களின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வருகிற ஜூன் 10-ம் தேதி அடுத்தகட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
இந்நிலையில் இது குறித்து பேசிய எஸ்.பி ஜெயக்குமார், ராமஜெயம் கொலை வழக்கில் ஏற்கனவே விசாரணை மேற்கொண்ட 6 அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராமஜெயம் மனைவி, உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் விசாரனை மேற்க்கொள்ளபட்டது. ராமஜெயம் சகோதரர் அமைச்சர் நேருவிடம் இரண்டு முறை விசாரனை மேற்க்கொள்ளபட்டது என தெரிவித்திருக்கிறார்.
எஸ்.பி ஜெயக்குமார் வெளியிட்டிருக்கும் பத்திரிக்கைச் செய்தியில், “ கடந்த 2012-ஆம் வருடம் மார்ச் மாதம்-29 ஆம் தேதி தொழிலதிபர் திரு.K.N. ராமஜெயம் என்பவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக திருச்சி மாநகரம் தில்லைநகர் காவல் நிலைய குஎண். 128/12 ச/பி 3468 மற்றும் 302 இ.த.சபடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சிறப்பு புலனாய்வுக்குழுவில் புலன்விசாரணையில் இருந்து வருகிறது. இவ்வழக்கு குறித்து கைபேசி தகவலை தீவிர பொதுமக்களிடமிருந்து அவ்வப்போது தகவல்கள், கடிதங்கள் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக பெறப்பட்டு வருகிறது. அவ்வாறு பெறப்பட்ட இக்குழுவானது தீவிர விசாரணை செய்து வருகிறது. எனவே இவ்வழக்கு தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறும் அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றும், இவ்வழக்கை தப்பு துலக்க சரியான தகவலை தருபவர்களுக்கு ரூ.50 இலட்சம் பண வெகுமதி வழங்கப்படும்' என தெரிவிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தெரிவிக்க வேண்டிய எண்கள்: 9080616241, 9498120467, 7094012599(WhatsApp).
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்