தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி அறிவிப்பு: எப்போது இந்தியாவுக்குள் என்ட்ரி கொடுக்கும்?
Southwest Monsoon: தென்மேற்கு பருவமழையானது, அந்தமான் நிக்கோபார் தீவில் வரும் மே மாதம் 13 ஆம் தேதி துவங்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழையானது, இந்தியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 13-ஆம் தேதி வாக்கில் துவங்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது, அங்கிருந்து நகர்ந்து இந்தியாவின் மற்ற நிலப்பகுதிக்குள் நுழையும். தென் மேற்கு பருவமையானது, இயல்பாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் ஆகிய காலங்களில் மழையை கொடுக்கும். இந்நிலையில், அடுத்த ஏழு தினங்களுக்கு வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை குறித்த தகவலை தெரிந்து கொள்வோம்.
06-05-2025:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
07-05-2025:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
08-05-2025 முதல் 12-05-2025 வரை:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
06-05-2025 மற்றும் 07-05-2025:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
07-05-2025 முதல் 09-05-2025 வரை:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
சென்னை வானிலையை பொறுத்தவரை, இன்று (06-05-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 287 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை (07-05-2025); வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.





















