மேலும் அறிய

வாகனத்திற்கு பேன்சி நம்பர் வேணுமா... அப்போ இனி அதுக்கு 2 மடங்கு கட்டணம் செலுத்தனுமாம்...

தங்களின் வாகனங்களுக்கு பேன்சி நம்பர்களை வைக்கும் விவிஐபிக்கள் வழக்கமான கட்டணத்தை விட இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

நியூமராலஜிக்காகவும் மற்றும் பிற காரணங்களுக்காகவும் பேன்சி நம்பர்களை தேடி வைப்பது பிரபலங்களிடேயே பழக்கமாக இருக்கிறது. பொதுவாக, சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், பிற விவிஐபிக்கள், தங்களின் வாகனங்களுக்கு பேன்சியான நம்பர்களை வைப்பார்கள். 

விரைவில், தங்களின் வாகனங்களுக்கு பேன்சி நம்பர்களை வைக்கும் விவிஐபிக்கள் வழக்கமான கட்டணத்தை விட இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இதுகுறித்து அரசு உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என அலுவலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

அக்டோபர் 7 தேதியிட்ட வீட்டுப் போக்குவரத்துத் துறையின் வரைவு அறிவிப்பில், அரசால் ஒதுக்கப்பட்ட 96 சிறப்பு பதிவு எண்களைப் பெறுவதற்கான கட்டணம் 100% உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 0001 மற்றும் 9999க்கு இடைப்பட்ட எண்களை பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

 

இந்த நடவடிக்கை அடுத்த சில ஆண்டுகளில் மாநிலத்திற்கான வருவாயை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021-22ஆம் ஆண்டில் போக்குவரத்துத் துறையின் வருவாய் ரூ.5,626.8 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒன்றுக்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்கள் ஒரே எண்ணுக்கு விண்ணப்பித்தால், அதிக சாலை வரி செலுத்தியவருக்கு அதிர்ஷ்ட எண் ஒதுக்கப்படும். 

ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு பேன்சி எண்களை வாங்குவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

மாநிலத்தால் ஒதுக்கப்பட்ட சிறப்பு எண்களுக்கான கட்டணங்கள், நடப்பு தொடரையும் சேர்த்து முதல் நான்கு தொடர்களுக்கு ரூ.40,000 லிருந்து 80,000 ஆக அதிகரித்தது. இங்கு, தொடர் என்பது நான்கு இலக்க பதிவு எண்ணுக்கு முன் வரும் எழுத்துக்களைக் குறிக்கிறது.

5 முதல் 8 வரையிலான தொடர்களுக்கான கட்டணம் ரூ.60,000லிருந்து ரூ.1.2 லட்சமாகவும், தொடர் 9 முதல் 10 வரை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது. 11 முதல் 12 வரையிலான தொடர்களை ஒதுக்குவதற்கு, தற்போது ரூ.2 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது, ரூ.4 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

ஆர்டிஓக்களில் 96 சிறப்பு எண்களைத் தவிர மற்ற ஃபேன்சி எண்களை வாங்குவதற்கு, வாகன ஓட்டிகள் ஆர்டிஓவில் பதிவு செய்யப்பட்ட எண்ணைச் சரிபார்த்து, அடுத்த 1000 எண்களில் இருந்து எண்களைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர், அதற்கான கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும்.

வாகனத்தின் விலையைப் பொறுத்து புல கட்டண அடுக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

கள்ளுக்கான தடையை மறு ஆய்வு செய்ய கோரி மனு.. உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு !
கள்ளுக்கான தடையை மறு ஆய்வு செய்ய கோரி மனு.. உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு !
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget