Watch Video: நாம் தமிழர் கட்சினாலே சிங்கப்பூர் வாழ்நாள் தடை போடுது.. கொதித்து பேசிய சீமான்.!
நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக தம்பி குமார் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் வேதனைக்குரியது. இது அவசியமற்றதும் கூட
நாம்தமிழர் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த காரணத்தினால் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்பவரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. மேலும், குமார் சிங்கப்பூர் நாட்டுக்குள் நுழைய வாழ்நாள் தடையையும் விதித்துள்ளது.
உதயநிதி அமைச்சரானால் வரவேற்பேன்: சீமான் | #Seeman #NTK #BJP #DMK pic.twitter.com/or7N9YGw66
— ABP Nadu (@abpnadu) December 19, 2021
சிங்கபூர் அரசின் இந்த செயலை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான கண்டித்துள்ளார். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக தம்பி குமார் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் வேதனைக்குரியது. இது அவசியமற்றதும் கூட. ஏற்கனவே, 400க்கும் மேற்பட்ட நாம் தமிழர் பொறுப்பாளர்களை சிங்கப்பூர் அரசு திருப்பி அனுப்பியுள்ளது. தூதரகத்தில் பலமுறை முறையிட்டு பார்த்தும், பிரச்னை தீரவில்லை. சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீக் வான் யூ வை நாம் தமிழர் கட்சி கொண்டாடியிருக்கிறோம். விடுதலைப் புலிகள் பிரபாகரனை காரணம் காட்டி இந்த நடவடிக்கையை சிங்கப்பூர் அரசு மேற்கொண்டு வருகிறது. சிங்கப்பூரில் எங்களது கட்சி ஒருகாலத்தில் வலிமையாய் இருந்தது. ஆனால், இப்போது முழுமையாய் முடக்கப்பட்டிருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
நேரலை: 19-12-2021 சீமான் செய்தியாளர் சந்திப்பு | முத்தமிழ்க்காவலர் ஐயா கி.ஆ.பெ.விசுவநாதம் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு - தலைமையகம் https://t.co/g85GbUh1zm
— நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@NaamTamilarOrg) December 19, 2021
குடும்ப பாரங்களை சமாளிக்க கிராமத்திலிருந்து எண்ணற்ற தமிழர்கள் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கின்றனர். அவர்கள் அங்கே செல்வதற்கு வாங்கப்பட்ட கடனை அடைக்க முடியாமலே பலர் தள்ளாடி வருகின்றனர். இப்படி சில காரணங்களால் பாதியிலே திருப்பி அனுப்பி வைக்கப்படுவதால் பலரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என நாம் தமிழர் கட்சியினர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்
மேலும் படிக்க : Valimai 3rd Single: அட.. அட.! அடுத்தடுத்து அப்டேட்டை தூவும் வலிமை குழு.! இன்று மூன்றாவது பாடல்?!
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்