”சாதாரண நோயை தீவிரமாக்குவது பயம்தான்.. போய்வா சகோதரா!” - ரசிகரின் மரணத்துக்கு சிம்பு இரங்கல்

ரசிகர்களே, நண்பர்களே, சகோதர சகோதரிகளே, நோய்வாய்ப்பட்டால் தயவுசெய்து நிலை குலையாதீர்கள். பயம் நம்மை வீழ்த்துகிறது. பயம்தான் நாம் நோயிலிருந்து குணமாக தடுக்கிறது. சாதாரண நோயைத் தீவிரமாக்குவதும் பயம்தான். -சிம்பு

கொரோனாவின் கோரப்பசிக்கு நாளுக்கு நாள் நிறைய உயிர்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்புவின் ரசிகர் ஒருவரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். சிம்புவின் அகில இந்திய ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருந்தவர் ’குட்லக்’ சதீஷ். இவர் சிம்புவின் " காதல் அழிவதில்லை " படம் முதலே சிம்புவிற்கு அறிமுகம். தற்போது கொரோனாவால் உயிரிழந்துள்ள இவரது இழப்பைத் தாங்க முடியாத சிம்பு கடிதம் வாயிலாக தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

 டிவிட்டர் பக்கத்தில் சிம்பு வெளியிட்டிருந்த கடிதத்தில்...”சாதாரண நோயை தீவிரமாக்குவது பயம்தான்.. போய்வா சகோதரா!” - ரசிகரின் மரணத்துக்கு சிம்பு இரங்கல்
"அன்பு தம்பியும் ’காதல் அழிவதில்லை’ படத்திலிருந்து என்னோடு கூட இருந்து வரும் சகோதரருமான குட்லக் சதீஷை காலத்தில் இழந்திருக்கின்றேன்

கொரோனா என்றவுடன் மருத்துவ உதவிக்கு எல்லாம் பேசி நம்பிக்கையோடு மீண்டு வருவார் என்று ஆறுதல் சொல்லி மருத்துவமனைக்கு அனுப்பினேன். அங்கு எடுத்துப் போகும் உடல்களை பார்த்து பயந்தது ஏன் சகோதரா? பயந்து உன் இதயத் துடிப்பை நிறுத்திக் கொண்டது ஏன் சகோதரா?எதிர்ப்பு சக்தி மீது நம்பிக்கை வைக்காமல் போனது ஏன் சகோதரரா? துயர் கொள்கிறேன். உன்னை இழந்துவிட்டதை நம்ப முடியாமல் தவிக்கின்றேன். உன் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் தவிக்கின்றேன். நீ செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி

அவசரப்பட்டுவிட்டாய், போய் வா சகோதரா, அழுகையுடன் வழி அனுப்பி வைக்கிறேன்.

ரசிகர்களே, நண்பர்களே, சகோதர சகோதரிகளே, நோய்வாய்ப்பட்டால் தயவுசெய்து நிலை குலையாதீர்கள். பயம் நம்மை வீழ்த்துகிறது. பயம் தான் நாம் நோயிலிருந்து குணமாக தடுக்கிறது. சாதாரண நோயைத் தீவிரமாக்குவதும் பயம்தான்

நிலைகுலைதல் இதயத்தை தாக்குகிறது. தயவுசெய்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையில் மருத்துவம் செய்து கொள்வோம்

நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள், அதேசமயம் மன திடத்தையும் பெருக்கிக் கொள்வோம். தேவையான மருந்துகள் எடுத்து கொள்வதோடு அல்லாமல் தேவையற்று வெளியே செல்வதை தவிர்க்கவும்

இழப்புகள் தாங்க முடியாததாக இருக்கிறது, பாதுகாப்பாக இருப்பதே கொரோனாவை விரட்டும் மருந்து என புரிந்து கொள்வோம். சகோதரன் குட்லக் சதீஷை இழந்தது போல் இன்னொருமுறை இழக்க விரும்பவில்லை

வருத்தங்களுடன் முடிக்கிறேன்  "

என சிம்பு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

Tags: Corona silambarasan tweet letter

தொடர்புடைய செய்திகள்

அச்சுறுத்தும் கொரோனா தொற்று : தேங்கிய கருப்பட்டி, கவலையில் பனை தொழிலாளிகள்..

அச்சுறுத்தும் கொரோனா தொற்று : தேங்கிய கருப்பட்டி, கவலையில் பனை தொழிலாளிகள்..

Me Too : ”நோ” சொல்லியும் நடந்தது : ஐ.ஆர்.எஸ் அதிகாரி பூ.கொ.சரவணன் மீது குவியும் புகார்கள்!

Me Too : ”நோ” சொல்லியும் நடந்தது : ஐ.ஆர்.எஸ் அதிகாரி பூ.கொ.சரவணன் மீது குவியும் புகார்கள்!

திருவண்ணாமலை : குறைந்துவரும் கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை..

திருவண்ணாமலை : குறைந்துவரும் கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை..

கோவை : கஞ்சாவுக்கு அடிமையானதால் விபரீதம் : கடத்தப்பட்ட டிக்டாக் சிறுமிகள் திண்டுக்கல்லில் மீட்பு

கோவை : கஞ்சாவுக்கு அடிமையானதால் விபரீதம் : கடத்தப்பட்ட டிக்டாக் சிறுமிகள் திண்டுக்கல்லில் மீட்பு

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரிய மனு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரிய மனு ஒத்திவைப்பு!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று 17,321 பேருக்கு உறுதியான கொரோனா தொற்று.

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று 17,321 பேருக்கு உறுதியான கொரோனா தொற்று.

Tamil Nadu Coronavirus: கோவை ஈரோட்டில் அதிகரிக்கும் கொரோனா.. 400ஐ தாண்டிய உயிரிழப்பு

Tamil Nadu Coronavirus: கோவை ஈரோட்டில் அதிகரிக்கும் கொரோனா.. 400ஐ தாண்டிய உயிரிழப்பு

பட்டியலின மக்களை கோவிலுக்குள் விடாமல் தடுத்த சம்பவம் : அமைச்சருக்கு கடிதம் எழுதிய ரவிக்குமார் எம்.பி.,

பட்டியலின மக்களை கோவிலுக்குள் விடாமல் தடுத்த சம்பவம் : அமைச்சருக்கு கடிதம் எழுதிய ரவிக்குமார் எம்.பி.,

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!