மது பரிசு: கள்ளக்குறிச்சி திருமண விழாவில் மாப்பிள்ளைக்கு மது பாட்டில் வழங்கிய நண்பர்களால் அதிர்ச்சி!
கள்ளக்குறிச்சியில் திருமண விழாவில் மாப்பிள்ளைக்கு மது பாட்டில் வழங்கிய நண்பர்களால் அதிர்ச்சி
![மது பரிசு: கள்ளக்குறிச்சி திருமண விழாவில் மாப்பிள்ளைக்கு மது பாட்டில் வழங்கிய நண்பர்களால் அதிர்ச்சி! Shocked by friends who gave a bottle of wine to the groom at the wedding ceremony in Kallakurichi மது பரிசு: கள்ளக்குறிச்சி திருமண விழாவில் மாப்பிள்ளைக்கு மது பாட்டில் வழங்கிய நண்பர்களால் அதிர்ச்சி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/25/5f0449931c23495d2a878199cb7232751684983837608194_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கள்ளக்குறிச்சியில் திருமண விழாவில் மாப்பிள்ளைக்கு மது பாட்டில் வழங்கிய நண்பர்களால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
திருமண நிகழ்ச்சிகளில் மணமக்களுக்கு, அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்குவது வழக்கம். சிலர் தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களையும், மணமக்கள் என்றும் மறக்காமல் நினைவில் வைத்திருக்கும் பொருட்களையும் வழங்குவர். இருப்பினும் மணமக்களின் நண்பர்கள் சிலர் பெட்ரோல், சிலிண்டர் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கி வந்தனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் நடந்த திருமண விழாவில் மணமக்களுக்கு மது பாட்டிலை நண்பர்கள் வழங்கியதால் அதிர்ச்சி அடைந்தனர்.
சமீப நாட்களாக சர்ச்சையில் ஓடிக் கொண்டிருப்பது திருமண விழா, விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைத்திருப்பதற்கும், பரிமாறுவதற்கும் அனுமதி என அறிவித்திருந்த நிலையில் அதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருமண விழாவில் மாப்பிள்ளைக்கு மது பாட்டில் வழங்கும் நிகழ்வு திருமண மண்டபத்தில் முகம் சுழிக்கும் விதமாக இருந்தது.
திருமண மண்டபத்தில் மதுபானம் - தமிழக அரசின் சட்டத் திருத்தம் நீக்கம்
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபானம் வைத்திருப்பதற்கும், பரிமாறுவதற்குமான சிறப்பு உரிமம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், புதுதில்லி போன்ற சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளவாறு. தமிழ்நாட்டிலும் வழங்கிட 18-3-2023 அன்று அரசிதழில் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையில், திருமணக் கூடங்களும், இதர இடங்களும் இடம் பெற்றிருந்தன.
இதுகுறித்து பெறப்பட்ட கருத்துக்களை கவனமுடன் பரிசீலித்த தமிழ்நாடு அரசு, தற்போது அவற்றை நீக்கி, வணிக வளாகங்களில் (Commercial Complexes) உள்ள மாநாட்டு மையங்கள் (Convention centres), கூட்ட அரங்குகள் (Conference Halls) ஆகியவற்றில் நடைபெறும் தேசிய நிகழ்வுகள், பன்னாட்டு நிகழ்வுகள், உச்சி மாநாடுகள் மற்றும் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் விளையாட்டு மைதானங்கள் / விளையாட்டு அரங்குகளில் அந்த நிகழ்வுகள் நடைபெறும்போது மட்டும் மதுபானம் வைத்திருத்தல் மற்றும் பரிமாறுவதற்கான தற்காலிக உரிமம் வழங்கப்படும் என்று திருத்தப்பட்ட அறிவிக்கையினை இன்று வெளியிட்டுள்ளது.
அதேபோன்று, இதுகுறித்து மேற்குறிப்பிட்ட அரசிதழில் வெளியிடப்பட்டிருந்த வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறையையும், இந்த திருத்தப்பட்ட அறிவிக்கையில் நீக்கம் செய்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)