மேலும் அறிய

Shankar IAS Academy: தவறான விளம்பரம் செய்ததாக சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு ரூ .5 லட்சம் அபராதம்: நடந்தது என்ன ?

Shankar IAS Academy: யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வு 2022 தொடர்பாக தவறான விளம்பரம் செய்ததாக சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தவறான விளம்பரம் செய்ததாக சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு சிசிபிஏ ரூ .5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு செய்தி வெளியீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளதாவது,  நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் விதிகளை மீறும் எந்தவொரு பொருள் அல்லது சேவைக்கும் தவறான அல்லது தவறாக வழிநடத்தும் விளம்பரம் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும்  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
சங்கர் ஐஏஎஸ் அகாடமி தனது விளம்பரத்தில் யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வு 2022 தொடர்பாக பின்வரும் தகவல்களை  முன்வைத்தது-

"அகில இந்திய அளவில் 933 பேரில் 336 பேர் தேர்வு"
"முதல் 100 இடங்களில் 40 பேர்"
"தமிழகத்தில் 42 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், அவர்களில் 37 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்தவர்கள்."
"இந்தியாவின் சிறந்த ஐஏஎஸ் அகாடமி"

சங்கர் ஐஏஎஸ் அகாடமி பல்வேறு வகையான படிப்புகளை விளம்பரப்படுத்தியது. ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வு முடிவுகளில் விளம்பரப்படுத்தப்பட்ட வெற்றிகரமான தேர்வர்கள் தேர்ந்தெடுத்த பாடநெறி தொடர்பான தகவல்கள் வேண்டுமென்றே விளம்பரத்தில் மறைக்கப்பட்டதை சி.சி.பி.ஏ கண்டறிந்தது.  இது நிறுவனத்தால் உரிமை கோரப்பட்ட வெற்றிகரமான தேர்வர்கள் அனைவரும் நிறுவனம் தனது இணையதளத்தில் விளம்பரப்படுத்திய கட்டண படிப்புகளைத் தேர்ந்தெடுத்ததாக நுகர்வோர் தவறாக நம்பும் விளைவை ஏற்படுத்துகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த நடைமுறையின் விளைவாகப் பயிற்சி நிறுவனங்களால் விளம்பரப்படுத்தப்பட்ட கட்டணப் படிப்புகளில் சேர்வதற்கு  நுகர்வோரை ஈர்க்கிறது.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி தனது பதிலில், யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வு  2022-ல் 336 தேர்வர்களுக்கு மாறாக 333 தேர்வர்களின் விவரங்களை மட்டுமே சமர்ப்பித்தது. உரிமைகோரப்பட்ட 336 மாணவர்களில், 221 பேர் கட்டணமில்லா நேர்காணல் வழிகாட்டல் திட்டத்தை எடுத்தனர், 71 பேர் முதன்மைத் தேர்வு தொடரை எடுத்தனர், 35 பேர் தொடக்கத் தேர்வு  தொடரை எடுத்தனர், 12 பேர் பொதுப்பாடங்களில் தொடக்க மற்றும்  முதன்மைத் தேர்வை எடுத்தனர், 4 பேர் தொடக்கத் தேர்வு தொடரை வேறு சில முதன்மைப் பாடத் திட்டங்களுடன் (விருப்ப மற்றும்/அல்லது ஜிஎஸ்) எடுத்தனர். இந்த உண்மை அவர்களின் விளம்பரத்தில் வெளிப்படுத்தப்படவில்லை. இதனால் நுகர்வோரை ஏமாற்றியுள்ளனர். இந்த முக்கியமான உண்மையை மறைப்பதன் மூலம், தேர்வர்களின் வெற்றியில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் பங்கு தெளிவாக  தெரியப்படுத்தாமல், தவறான மற்றும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு, நியாயமற்ற வர்த்தக நடைமுறையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தகவல் பெறுவதற்கான நுகர்வோரின் உரிமையை இந்த விளம்பரம் மீறியுள்ளது.

சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் இருந்து தொடக்கப் பாடத்தைத் தெரிவு செய்த  18 நேர்வுகளில், ரசீதில் பாடத்தின் தொடக்க தேதி 09.10.2022 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வு 2022-ன் தொடக்கத் தேர்வு 05.06.2022 அன்று நடத்தப்பட்டு முடிவு 22.06.2022 அன்று அறிவிக்கப்பட்டது, அதாவது இந்த தேர்வர்கள்  அடுத்த யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வு 2023 தொடக்கத் தேர்வுக்கான பாடத்தைத் தெரிவு செய்துள்ளனர் என்று அர்த்தம். சங்கர் ஐஏஎஸ் அகாடமி இந்த தேர்வர்களை  யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வு 2022-ன் மொத்த தேர்வுப் பட்டியலில் உரிமைகோரியுள்ளது.

சிசிபிஏ தலைமை ஆணையர் திருமதி நிதி கரே கூறுகையில், செய்தி அறிக்கைகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கின்றனர். சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் விளம்பரம் யுபிஎஸ்சி ஆர்வலர்களை இலக்காகக் கொண்டது. அதனால்தான் இத்தகைய விளம்பரங்கள் உண்மையான, நேர்மையான பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
Embed widget