தம்பி என கூப்பிடலாமா? ஆசையாக கேட்ட டி.ஆர். பாலு.. விழுந்து விழுந்து சிரித்த சுதீஷ்
மேடையில் பேச தொடங்கிய திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷை பார்த்து தம்பி என கூப்பிடலாமா என இரு முறை கேட்டார். இல்லையென்றால், வேறு ஏதாவது போட்டுவிட போகிறார்கள் என தெரிவித்தார். இதனால், அரங்கம் முழுவதும் சிரிப்பொலி எழுந்தது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி சி.கே. பெருமாளின் 80 வது பிறந்த நாள் விழா சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில், திமுக எம்.பி டி.ஆர்.பாலு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சபாநாயகர் அப்பாவு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தம்பி என கூப்பிடலாமா?
பின்னர், மேடையில் பேச தொடங்கிய திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷை பார்த்து தம்பி என கூப்பிடலாமா என இரு முறை கேட்டார். இல்லையென்றால், வேறு ஏதாவது போட்டுவிட போகிறார்கள் என தெரிவித்தார். இதனால், அரங்கம் முழுவதும் சிரிப்பொலி எழுந்தது.
இதையடுத்து, பேசிய தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ், "இந்த நிகழ்ச்சியை முன் எடுத்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துக்கள். கேட்பன் குடும்பம் காங்கிரஸ் பின்னணியில் இருந்து தான் வந்தது.
எங்கள் கட்சி உருவானபோது காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க வேண்டும் என சி.கே.பெருமாள் விரும்பினர்.
ஆசையாக கேட்ட டி.ஆர். பாலு!
9 நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் என கூட்டணி எல்லாம் பேசப்பட்டது. அப்போது, அந்த கூட்டணி அமைய வில்லை. கூட்டணி சூழலை ஏற்படுத்த முழு காரணம் தங்கபாலு மற்றும் சி.கே.பெருமாள் தான். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சி.கே.பெருமாள் வேட்பாளராக களம் காண வேண்டும். விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் திருனாவுகரசர்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விஜயகாந்த் மீது தனி அன்பு கொண்டவர். அவருக்கு உடல்நிலை சரியில்லாத போது கூட அடிக்கடி வீட்டில் வந்து உரிமையோடு பார்த்து செல்வார். காங்கிரஸ் மீது எப்போதும் ஒரு தனிப்பிரியம் உண்டு. நான் இதற்கு மேல் பேசினால் அது அரசியல் ஆகிவிடும்" என்றார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த கூட்டத்தில் தேமுதிகவின் எல். கே. சுதீஷ் கலந்து கொண்டிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















