மேலும் அறிய

‛பிரிவினைவாதம்... மதவாதம் தொடர்பாக தனிப்பிரிவு வேண்டும்’ -திருமாவளவன் பேட்டி!

‛சாதிய மதவாத வன்முறைகளைத் தூண்டும் வகையில் வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தனி உளவு அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்’ -திருமாவளவன்

சென்னை கொளத்தூரில் தலித் மற்றும் இசுலாமியர் எழுச்சி நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அமைச்சர்கள் சேகர் பாபு , சா.மு நாசர் , திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன் ;
 
‛‛பொது துறை வங்கிகளை தனியார் மையப்படுத்தும் நடவடிக்கைகளில் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன. ஆனால் இன்றைக்கு பாஜக அரசு அனைத்தும் தனியார் மையபடுத்துவதில் தீவிரம் காட்டுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பணி செய்து கொண்டு இருக்கிறது. இந்த போக்கு மிகவும் கண்டிக்க தக்கது. வங்கி ஊழியர்களின் போராட்டம் வெல்ல விடுதலை சிறுத்தைகள் துணையாக இருக்கும்.

‛பிரிவினைவாதம்... மதவாதம் தொடர்பாக தனிப்பிரிவு வேண்டும்’ -திருமாவளவன் பேட்டி!
 
அரசு பேருந்தில் நரிகுறவர் சமூகத்தை சார்ந்தவர்களை வழுகட்டாயமாக கீழே இறக்கி விட பட்டு இருக்கிறார்கள். 21 ம் நூற்றாண்டில் இத்தகைய கொடுமைகள் தமிழகத்தில் அரங்கேறி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. இது கடுமையான வேதனையை உருவாக்குகிறது. மாண்புமிகு முதல்வர் இதில் தீவிரம் கவனம் செலுத்த வேண்டும்.
 
கருத்து சுதந்திரம் என்கிற பேரில் அவதூறுகளைப் பரப்புவது வதந்திகளை பரப்புவது தான் பாஜகவின் அரசியல். இவர்கள் செய்வது அரசியல் நடவடிக்கை அல்ல சமூக விரோத நடவடிக்கை. வன்முறையை தூண்டும் வகையில் வதந்திகளை பரப்பும் பிரிவினைவாத சக்திகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களை வதந்தி பரப்புவதற்காக தவறாக பயன்படுத்தும் சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.
 
தேசத்தை எந்த அளவிற்கு மதிக்கிறோமோ அதே அளவிற்கு தாய்மொழியும் மதிக்க வேண்டும். அவரவர் தாய் மொழியை உயர்வாக பேசுவதையும் மதிப்பை கொடுப்பதையும் நாம் பார்க்கிறோம். எனவே தேசிய கீதத்திற்கு கொடுக்கும் அதே மரியாதையை தமிழர்கள் தமிழ் தாய் வாழ்த்துக்கும் கொடுக்கிறார்கள். 
 
அம்பேத்கர் பிறந்த நாளன்று சாதியவாத மதவாத சக்திகள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகளின் வன்முறை அதிகரித்து வருகிறது. எனவே இவற்றை அடக்கும் வகையில் சாதிய மதவாத வன்முறைகளைத் தூண்டும் வகையில் வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தனி உளவு அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். காவல் துறையின் சார்பில் பிரிவினை வாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் வகையில் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தனிப்பிரிவு உருவாக்க வேண்டும் என கூறினார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget