செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
தவெக ஆட்சியைக் கவிழ்க்க பேரம் பேசப்பட்ட குற்றச்சாட்டில் செந்தில் பாலாஜி தலைமறைவாக இருப்பது குறித்து மு.க.ஸ்டாலின், உதயநிதி மெளனம் காப்பது திமுக-விற்கு பின்னடைவை உண்டாக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மொத்த அரசியல் களமும் மாறியுள்ளது. கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோற்றது, திமுக எதிர்க்கட்சிக்கு தள்ளப்பட்டது, திமுக-வின் கோட்டையான சென்னை தவெக வசம் சென்றது என பல காரணங்களால் திமுக அதிருப்தியில் உள்ளது.
செந்தில் பாலாஜிக்கு தொடர்பா?
தவெக அரசு மீது சரமாரி விமர்சனங்களை திமுக முன்வைத்து வரும் சூழலில், தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக தரப்பில் இருந்து பேரம் பேசப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு திமுக-விற்கு மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்கியுள்ளது. ஊத்தங்கரை எம்எல்ஏ இதுதொடர்பாக அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த குற்றச்சாட்டு வந்தது முதலே செந்தில் பாலாஜி தலைமறைவாக இருந்து வருகிறார். அவரது சகோதரரை இந்த வழக்கில் போலீசார் தேடி வரும் சூழலில், அவர் முன்ஜாமின் காேரியிருப்பதும் திமுக-வை பின்னடைவை உண்டாக்கியுள்ளது. செந்தில் பாலாஜி வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சி எடுக்கிறார் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், அவர் வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்கும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி:
இந்த குற்றச்சாட்டுக்கு பிறகு செந்தில் பாலாஜி வெளியுலகிற்கு வராததும் திமுக மீதான விமர்சனத்தை வலுவாக்கி வருகிறது. முன்னாள் அமைச்சர் எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்காெண்டதற்கு திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். ஆனால், செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட விவகாரத்திலும், திமுக-வினர் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாக தவெக தரப்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டிற்கும் மு.க.ஸ்டாலினோ, உதயநிதியோ இதுவரை மெளனம் காத்து வருகின்றனர்.
சிக்கலில் திமுக:
இந்த சூழலில், இன்று ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ-வும் ஆட்சியைக் கவிழ்க்க பேரம் பேசி தன்னைத் தொடர்பு கொண்டதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதற்கான ஆதாரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். தன்னிடம் பேரம்பேசியது முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது திமுக-வினருக்கு இன்னும் சிக்கலை உண்டாக்கியுள்ளது.
தவெக பெரும்பான்மை இல்லாத சூழலில், திமுக - அதிமுக இணைந்து ஆட்சியமைக்க முயற்சித்ததாக எழுந்த குற்றச்சாட்டே அப்போது இரு கட்சியினருக்கும் பெரும் களங்கத்தை உண்டாக்கியது. இதுதொடர்பாக, அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் மற்றும் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தலைவர்களும் ஒப்புக்கொண்டதும் இந்த விவகாரத்தில் திமுக-விற்கு பின்னடைவை உண்டாக்கியது.
Before You Go
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















