மேலும் அறிய

Seeman: மக்கள்நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் வேண்டும்: சீமான்

தமிழ்நாடு அரசு மக்கள்நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசு மக்கள்நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

அதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பணி பாதுகாப்பு கோரியும், உரிய ஊதியம் வேண்டியும் போராடும் மக்கள்நலப் பணியாளர்களை, பணிநிரந்தரம் செய்ய மறுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. வாழ்வாதார உரிமைக்காக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த பிறகும், மக்கள் நலப் பணியாளர்களை இரு திராவிட அரசுகளும் தொடர்ந்து அலைக்கழிப்பது மிகுந்த வேதனைக்குரியது.

கடந்த 1990ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊராட்சிகளில் பொது நலப்பணிகளைப் புரிவதற்கு ஏறத்தாழ 25,000 பணியாளர்கள் தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டனர். அவ்வாறு நியமிக்கப்பட்ட மக்கள்நலப் பணியாளர்கள், அதிமுக ஆட்சி அமையும் ஒவ்வொரு முறையும் பணி நீக்கம் செய்யப்படுவதும், மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்போது பணி நியமனம் செய்யப்படுவதும் என, மாறிமாறி ஆண்ட இரு திராவிடக் கட்சிகளினால் மக்கள் நலப்பணியாளர்களின் வாழ்வே முற்றாகச் சீரழிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பணி கிடைக்குமா என்பதும் தெரியாமல், வேறு பணிகளுக்கும் செல்ல முடியாமல், வாழ்வாதாரத்தை இழந்து, கடந்த 30 ஆண்டுகளாக மக்கள்நலப் பணியாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகித் தவித்துவருகின்றனர். திராவிட அரசுகள் தங்களுக்கு இழைத்த அநீதிக்கு எதிராக அம்மக்கள் தொடுத்த வழக்கில், நீண்ட சட்டப்போராட்டத்திற்குப் பிறகு கடந்த 2014ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் மக்கள் நலப்பணியாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டுமெனவும், உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டது. ஆனால் அப்போதையை அதிமுக அரசு அதனைச் செய்ய மறுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மக்கள் நலப்பணியாளர்களின் வயிற்றில் அடித்தது.

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது மக்கள் நலப்பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதியளித்து மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக அரசும், முந்தைய அதிமுக அரசு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விடாப்பிடியாகத் தொடர்ந்து நடத்தி பணிநிரந்தரம் செய்ய மறுப்பதோடு, தற்காலிக பணியாளர்களாகப் பணிபுரிய தொகுப்பூதியமாக மாதம் 7500 ரூபாய் மட்டுமே வழங்க முடியும் என்று அறிவித்திருப்பது மக்கள் நலப்பணியாளர்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகமாகும். திராவிடக் கட்சிககள் தங்களுக்குள்ளான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அப்பாவி ஏழை மக்களின் குடும்பங்களை வறுமையில் தவிக்க விடுவது ஏற்கமுடியாத பெருங்கொடுமையாகும்.

ஆகவே, இனியும் காலதாமதம் செய்யாமல், மக்கள் நலப்பணியாளர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். மேலும், உயர்நீதிமன்ற உத்தரவின்படி அவர்களைக் காலமுறை ஊதிய பணியாளர்களாகப் பணிநிரந்தரம் செய்து, தகுந்த இழப்பீடு மற்றும் ஊதியம் வழங்கவும் அரசாணை வெளியிட வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன் இவ்வாறு அவர் சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Priyanka Chopra : உலக தோழர்களே ஒன்று கூடுங்கள்; அழைப்பு விடுத்த பிரியங்கா சோப்ரா 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Embed widget